உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். பி. விஸ்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். பி. விஸ்வம் என அழைக்கப்படும் இராமநாதபுரம் (கோவை) பொன்னுசாமி தேவர் விஸ்வநாதன் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், திரைக்கதை, வசன எழுத்தாளரும் ஆவார். இவர் 60-70களில் முன்னணித் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் தூரத்து உறவினர் என்பதால் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு 80களில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜின் திரைப்படங்களிலும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

திரையுல வாழ்க்கை

[தொகு]
  • இவர் ஆரம்ப காலத்தில் தனது தந்தை பொன்னுசாமி தேவர் அவர்கள் கோவை இராமநாதபுரத்தில் நடத்தி வந்த பெரிய ஜவுளி கடையில் தான் அப்போது சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் தனது திரைப்படம் சார்ந்த அனைத்து உடைகள் வாங்கும் வாடிக்கையாளராக இருந்த போது தான் விஸ்வம் அவர்களுக்கு திரையுலகில் அன்றைய தேவரின் ஆதர்ச நடிகரான புரட்சி தலைவர் எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பும் அவரை போலவே திரையுலகில் நடை, உடை, பாவனை, பாணியில் எம். ஜி. ஆர் முன் நடித்து காட்டி பாராட்டினை பெற்றார்.
  • அதன் பிறகு தனது உறவினர் மாமா முறையான சின்னப்பா தேவர் அவர்கள் அறிவுரையால் திரையுலக ஆசை வேண்டாம் என்று அவரது தந்தை பொன்னுசாமி இடம் கூற அந்த கண்டிப்பையும் மீறி திரையுலக ஆர்வத்தின் மேல் விஸ்வம் அவர்கள் தேவர் உடன் உதவி இயக்குநராக தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனையன், குடும்பத்தலைவன், நீதிக்கு பின் பாசம், வேட்டைகாரன், தொழிலாளி, தெய்வ திருமகள், தாயும் மகளும், கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், காதல் வாகனம், தெய்வச்செயல், நல்ல நேரம் அதன் பிறகு வெளியான தேவரின் பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் படத்தின் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளின் உதவியாளராக செயல்பட்டுவந்தார்.
  • அதனால் அப்போது ஆர். பி. விஸ்வம் அவர்களுக்கு எம். ஜி. ஆர், சரோஜாதேவி, கே. ஆர். விஜயா, ஜெயலலிதா, எம். ஆர். ராதா, எம். என். நம்பியார், ஆர். எஸ். மனோகர், எஸ். ஏ. அசோகன், நாகேஷ், மனோரமா போன்ற முன்னணி நடிகர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
  • இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய திரைப்படமான 1962 ஆம் ஆண்டு தேவரின் குடும்பத்தலைவன் படத்தில் முதல் பாடல் காட்சியான அன்றோரு நாள் அவனுடைய பெயரை கேட்டேன் என்ற பாடல் படபிடிப்பு கோவை மருதமலை முருகன் கோயில் காட்சி படுத்த சாண்டோ சின்னப்பா தேவர் திட்டமிட்டு இருந்த போது மருதமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த பாடல் படப்பிடிப்பு நடக்கும் போது நடிகை சரோஜாதேவி அவர்கள் ஒரு பள்ளத்தில் தவறி விழுந்து விட அவருக்கு அப்போது இடுப்பில் பயங்கரமான சுளுக்கு வலி ஏற்பட்டுவிட்டதால் தொடர்ந்து பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று கூற உடனே சின்னப்பா தேவர் மன வருத்ததுடன் முருகா என்ன செய்வது என்று தெறியாமல் நின்ற போது உடனே சிறுவன் ஆர். பி. விஸ்வம் அவர்கள் சரோஜா தேவியை ஒரு பலகையில் படுக்க வைத்து உலக்கையால் அவர் இடுப்பில் மேலும் கீழும் உருட்டியவுடன் அவர் சுளுக்கு இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அந்த இடத்தில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து நீவிவிட்டு அதன் மேல் உலக்கையை வைத்தவுடன் உலக்கை நேர் நிலையாக நின்ற போது அனைவரும் சரோஜாதேவியை கண்டு மனதார சிரித்தனர் அதன் பிறகு சரோஜாதேவி இடுப்பில் இருந்த உலக்கை விழுந்தவுடன் அலறியபடியே சுளுக்கு வலி நீங்கியவுடன் சிறுவன் விஸ்வம் அவர்களுக்கு சரோஜாதேவி அவர்கள் முத்தம் கொடுத்து அவரிடம் இருந்த பல வெளிநாட்டு சாக்லேட்களை வழங்கி நன்றி தெறிவித்த பிறகு தொடர்ந்து அந்த பாடல் காட்சியில் முழுவதுமாக சரோஜாதேவி நடித்த கொடுத்தார்.
  • அதே போல் தனிப்பிறவி படத்தில் ஒரு பாடல் காட்சியில் சாண்டோ சின்னப்பா தேவர் எம்ஜிஆரை முருகன் வேடத்தில் படமாக்க நினைத்தார் ஆனால் அப்போது எம். ஜி. ஆர் அவர்கள் தான் சார்ந்திருந்த திமுக கடவுள் மறுப்பு கொள்கையேற்று செயல்பட்டு வருவதால் அதில் நடிக்க மறுத்ததால். சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் ஆர். பி. விஸ்வத்தை எம்ஜிஆரின் முகத்தோற்றத்தில் மிகவும் தத்ரூபமாக ஜெயலலிதாவுடன் நடிக்க வைத்தார்.
  • அதன் பிறகு 1980களில் சிறிய சிறிய நாடகங்கள் மற்றும் எம். ஜி. ஆர் மீதான பல அரசியல் விமர்சனங்களை நீக்கும் விதமாக பல நல்ல நாடகங்களை விஸ்வம் நடத்தி வந்தார்.
  • அதன் பிறகு தனது நண்பரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் இணைந்து அவர் இயக்கி நடிக்கும் படங்களில் ஆர். பி. விஸ்வம் பங்கு அதிகாமானது.
  • அதன் பிறகு விஸ்வம் தானாகவே திரைக்கதை, வசனம், நடிப்பு என்ற பரிமாற்றத்தில் தன்னை திரையுலகில் முன்னிலை படத்தில் கொண்டார்.

திரைப்படப் பங்களிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._விஸ்வம்&oldid=4191369" இலிருந்து மீள்விக்கப்பட்டது