ஆர். பி. குருதேவ்
ஆர். பி. குருதேவ் | |
|---|---|
| பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | ஒளிப்பதிவாளர் |
ஆர். பி. குருதேவ் (R. B. Gurudev) என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றிவருகிறார்.
தொழில்
[தொகு]ஜீவாவிடம் பயிற்சி பெற்ற, குருதேவ் யோகி (2009) மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார், இருப்பினும் தநா-07-அல 4777 (2009) படம் முன்னதாகவே வெளியானது. [1] குருதேவின் படைப்புகள் பெரும்பாலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன, என்றாலும் அவர் பணியாற்றிய படங்கள் பல சமயங்களில் வணிக ரீதியான வெற்றியைப் பெறத் தவறிவிட்டன.. சிக்கு புக்கு (2010) படத்தில் இவரது பணிக்காக, தி இந்துவின் ஒரு விமர்சகர், குருதேவ் "மறைந்த ஜீவாவின் பாணியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கிறார், தனது ஒளிப்படமியை மிக நேர்த்தியாகக் கையாண்டு, ஒரு அற்புதமான காட்சி விருந்தை அளிக்கிறார்" என்று குறிப்பிட்டார். இதேபோல் அமீரின் ஆதி பகவான் திரைப்படத்தைப் பற்றி எழுதிய ஒரு விமர்சகர், "பட்டாயாவின் கடற்கரைகள், ராஜஸ்தானின் பாலைவனங்கள், அழகிய கோவா அல்லது மும்பை என எதுவாக இருந்தாலும், கே. தேவரஜ் மற்றும் ஆர். பி. குருதேவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு ஒரு முழுமையான விருந்தை அளிக்கிறது", என்றும், "ஒவ்வொரு காட்சியும் மிகச் சுவைபடப் படமாக்கப்பட்டுள்ளது" என்றும் எழுதினார். [2] இதேபோல், மேகா (2014) படத்தில் இவரது பணி, அப்படத்தின் சில "சிறப்பான அம்சங்களில்" ஒன்றாக விவரிக்கப்பட்டது.
வெற்றிபெற்ற காஞ்சனா 2 (2015) திரைப்படத்தின் உருவாக்கத்தில் குருதேவ் ஈடுபட்டிருந்தார்; அப்படத்தின் படப்பிடிப்பில் எண்பது சதவீதத்தை அவரே நிறைவு செய்திருந்தார். இருப்பினும், அப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, அவரால் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை; ஏனெனில், அதற்குள்ளாகவே அவர், இரும்புக் குதிரை (2014) திரைப்படத்தில் பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். குருதேவிற்காகக் காத்திருக்க விரும்பாத ராகவா லாரன்ஸ், வேறொரு ஒளிப்பதிவாளரைக் கொண்டு காஞ்சனா 2 படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிவெடுத்தார்; இது குருதேவிற்குப் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. [3]
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2007 | உற்சாகம் | தமிழ் | |
| ராமேஸ்வரம் | தமிழ் | ||
| 2009 | தநா-07-அல 4777 | தமிழ் | |
| யோகி | தமிழ் | ||
| 2010 | சிக்கு புக்கு | தமிழ் | |
| 2013 | அமீரின் ஆதி-பகவன் | தமிழ் | |
| வத்திக்குச்சி | தமிழ் | ||
| 2014 | மேகா | தமிழ் | |
| இரும்புக் குதிரை | தமிழ் | ||
| 2015 | கஞ்சனா 2 | தமிழ் | |
| 144 | தமிழ் | ||
| 2018 | மோகினி | தமிழ் | |
| களரி | தமிழ் | ||
| ஜீனியஸ் | தமிழ் | ||
| 2019 | கென்னடி கிளப் | தமிழ் | |
| கொரில்லா | தமிழ் | ||
| 2022 | அஷ்டகர்மா | தமிழ் | |
| யுத்த சத்தம் | தமிழ் | ||
| 2025 | வணங்கான் | தமிழ் | பாலசுப்ரமணியம் மாற்றப்பட்டார் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Review : (2009)". சிஃபி. Archived from the original on 25 November 2015. Retrieved 22 September 2018.
- ↑ "Review: Ameerin Aadhi Bhagavan is too violent". rediff.com. Retrieved 22 September 2018.
- ↑ "Cinematographer Gurudev feels wronged by Lawrence in Ganga". Kolly Talk. 2014-09-09 இம் மூலத்தில் இருந்து 2014-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141013214810/http://www.kollytalk.com/cinenews/cinematographer-gurudev-feels-wronged-lawrence-ganga-173840.html.