உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். பாலகிருஷ்ணன்
ஆர் பாலகிருட்டிணன்
பிறப்புநவம்பர் 6, 1958 (1958-11-06) (அகவை 65)[1]
திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஇந்திய ஆட்சிப்பணி
வாழ்க்கைத்
துணை
சுஜாதா
பிள்ளைகள்ரூபவர்த்தினி

ஆர். பாலகிருஷ்ணன் (R. Balakrishnan) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலரும், இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளருமாவார். ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி ஓய்விற்குப் பிறகு அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளார்.[2][3]

இளமைக் காலம்

[தொகு]

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் 1958 இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று, பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்ற தேர்வராக[4] 1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்வானார்.

அரசுப்பணி

[தொகு]

பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை போன்ற பல அரசுப் பணிகளில் இந்தியா முழுவதும் பணியாற்றியுள்ளார்.

சிந்து சமவெளி ஆய்வுகள்

[தொகு]

சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டும் வருகிறார்.[5] ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் தனது சிந்துவெளி ஆய்வுக் கட்டுரையை கோவை செம்மொழி மாநாட்டில் சமர்பித்தார். சிந்துவெளி ஆய்வுகளுக்காக பெரியார்-மணியம்மை பல்கலைக் கழகம் 2017-ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[6]

வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள'கொற்கை,வஞ்சி, தொண்டி வளாகத்தை' ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நூல்கள்

[தொகு]
 • அன்புள்ள அம்மா (1991)
 • சிறகுக்குள் வானம் (2012)
 • சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (2016)[7]
 • நாட்டுக்குறள் (2016)
 • பன்மாயக் கள்வன் (2018)
 • இரண்டாம் சுற்று (2018)
 • குன்றென நிமிர்ந்து நில்
 • ஜர்னி ஆஃப் எ சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை (2019) (Journey of a Civilization: Indus to Vaigai)
 • கடவுள் ஆயினும் ஆகுக (February 2021)
 • அணி நடை எருமை ( February 2022)
 • ஓர் ஏர் உழவன்( செப்டம்பர் 2022)
 • ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை (Journey of a Civilization: Indus to Vaigai நூலின் தமிழாக்கம்)

மேற்கோள்கள்

[தொகு]
 1. "GRADATION LIST OF OFFICERS OF INDIAN ADMINISTRATIVE SERVICE CADRE" (PDF). homeodisha.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 December 2019. {{cite web}}: line feed character in |title= at position 30 (help)
 2. "Odisha Govt appoints retired IAS officer R. Balakrishnan as chief advisor (special initiative) of state government". orissadiary.com. https://orissadiary.com/odisha-govt-appoints-retired-ias-officer-r-balakrishnan-chief-advisor-special-initiative-state-government/. பார்த்த நாள்: 17 December 2019. 
 3. "“I wanted to be a film actor”, reveals former IAS officer R Balakrishnan". indiawhispers.com. https://www.indiawhispers.com/2018/12/01/i-wanted-to-be-a-film-actor-reveals-r-balakrishnan/. பார்த்த நாள்: 17 December 2019. 
 4. "வரலாறு என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி - நேர்காணல்: சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்". Hindu Tamil Thisai. 2023-05-07. பார்க்கப்பட்ட நாள் 2023-05-10.
 5. "கீழடி - சிந்து சமவெளி - சங்க இலக்கியம்: இணைக்கும் புள்ளி எது? விவரிக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்". பிபிசி. https://www.bbc.com/tamil/india-49802510. பார்த்த நாள்: 17 December 2019. 
 6. "சிந்துவெளி ஆய்வுகளுக்காக பெரியார்-மணியம்மை பல்கலைக் கழகம் 2017-ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது". The New Indian Express. https://www.newindianexpress.com/states/odisha/2018/dec/16/history-is-inescapable-says-balakrishnan-1912248.html. பார்த்த நாள்: 16 December 2018. 
 7. "சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்". தினமணி. https://www.dinamani.com/specials/nool-aragam/2016/jul/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2744.html. பார்த்த நாள்: 17 December 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பாலகிருஷ்ணன்&oldid=3711756" இலிருந்து மீள்விக்கப்பட்டது