உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். சுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். சுப்ரமணியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1962–1967
முன்னையவர்ஜி. வெங்கடாசல நாட்டார்/கே. சுப்ரமணியம்
பின்னவர்இரெ. சவுந்தரராஜ மூப்பனார்
தொகுதிபாபநாசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1915-04-06)6 ஏப்ரல் 1915
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

ஆர். சுப்ரமணியன் (R. Subramanian)(6 ஏப்ரல் 1915-13 மார்ச் 2005)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திட்டை கிராமத்தினைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் ஆர். சி. உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியிலும், புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]

தேர்தல் செயல்பாடு

[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: பாபநாசம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். சுப்ரமணியன் 33,144 53.42% +23.72
திமுக என். சோமசுந்தரம் 28,904 46.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,240 6.83% 1.16%
பதிவான வாக்குகள் 62,048 74.22% -7.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,481
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 23.72%

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_10.pdf
  2. Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 218.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுப்ரமணியன்&oldid=4358971" இலிருந்து மீள்விக்கப்பட்டது