ஆர். சுந்தரராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். சுந்தரராஜன் (R. Sundarrajan, இறப்பு:சூலை 7, 2020) என்பவர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினறும் ஆவார். இவர் மதுரை மாவட்டம், மதுரை மத்திய தொகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தே.மு.தி.கவின் மாநில பொருளாளராகவும் இருந்தார்.[1] இவர் முதலில் விஜயகாந்த் இரசிகர் மன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் விஜயகாந்த் இரசிகர் மன்ற மாநிலத் தலைவராக ஆனார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுந்தரராஜன்&oldid=3542816" இருந்து மீள்விக்கப்பட்டது