ஆர். சிவபோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். சிவபோகம்
பிறப்பு1907 சூலை 23
இறப்புசூன் 14, 1966(1966-06-14) (அகவை 58)
பணிபட்டையக் கணக்காளர்

ஆர். சிவபோகம் (R Sivabhogam (பிறப்பு 23 சூலை 1907 ) என்பவர் இந்தியாவின் முதல் பெண் பட்டையக் கணக்களார் ஆவார்.[1]

சென்னையைச் சேர்ந்த சிவபோகம். ராணி மேரிக் கல்லூரியில் படித்தவர். இவர் ’சகோதரி’ ஆர். எஸ். சுப்புலட்சுமியால் உத்வேகம் பெற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். விடுதலையாகி 1933-ல் கணக்கர் பட்டயப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம், இந்தியாவின் முதல் பெண் பட்டையக் கணக்காளர் என்ற பெருமையைப் பெற்றார். சிறை சென்றவர்கள் கணக்கராகப் பதிவு செய்து கொண்டு செயல்பட முடியாது என்ற சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து,வெற்றியும் பெற்றார்.[2] 1937-ல் இருந்து முதல் பெண் கணக்கராகச் செயல்பட ஆரம்பித்தார். பின்னர் சிவாபோகம் இந்தியப் பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் தென் இந்திய பிராந்திய கவுன்சில் (SIRC) தலைவராக ஆனார் (பிற்கால சென்னை கவுன்சில்). 1955 முதல் 1958 வரை தொடர்ச்சியான மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருந்த ஒரே பெண் இவர் மட்டுமே.

1949 ம் ஆண்டு இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) நிறுவப்பட்டபோது, சிவாபோகம் அதன் உறுப்பினராக சேர்ந்தார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தார்.

பல்வேறு சமூகப் பணி அமைப்புகளுக்குக் கணக்குத் தணிக்கை செய்வதைத் தன்னுடைய வாழ்க்கையாகக் கொண்டார். குறிப்பாக பெண் கல்விக்காக பாடுபட்டார்.காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் ஆவார் மற்றும் 1966 சூன் 14 இல் அவரது மரணம்வரை அவர் கதர் ஆடையையே அணிந்துவந்தார்.[3]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சிவபோகம்&oldid=3312623" இருந்து மீள்விக்கப்பட்டது