உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். சின்னசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. சின்னசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்எம். எஸ். கவுண்டர்
பின்னவர்பா. க. சி. முத்துசாமி
தொகுதிதருமபுரி
பதவியில்
1984–1986
முன்னையவர்செ. அரங்கநாதன்
பின்னவர்பி. பொன்னுசாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-06-06)6 சூன் 1936
பழைய தர்மபுரி
இறப்பு28 ஆகத்து 2025
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்வணிகம்

ஆர். சின்னசாமி (இராமா கவுண்டர் சின்னசாமி) (இறப்பு: 28 ஆகத்து 2025[1], R. Chinnasamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1984, 1989 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், தர்மபுரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சி வேட்பாளராக போட்டியிட்டுத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத்,  தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

இவர் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டச் செயலாளராக ஏறத்தாழ 15 ஆண்டுகள் செயலாற்றி செயலாற்றி வந்தார்.

1984 ஆண்டு திமுக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தனது பதவியை இழந்தார்.

வைகோ திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக துவங்கியபோது சின்னச்சாமியும் அவருடன் சென்றார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தருமபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! tamil.oneindia, 28 ஆகத்து 2025
  2. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 87.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-22.
  4. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-22.
  5. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சின்னசாமி&oldid=4333533" இலிருந்து மீள்விக்கப்பட்டது