ஆர். கோபாலகிருஷ்ணன் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். கோபாலகிருஷ்ணன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014-2019
பதவியில்
1 செப்டெம்பர் 2014 – 31 ஆகஸ்ட் 2019
தொகுதி மதுரை நாடாளுமன்ற தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 5 அக்டோபர் 1968 (1968-10-05) (அகவை 52)
செல்லூர், மதுரை, தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி கோ. தீபா
பிள்ளைகள் 2
இருப்பிடம் மதுரை, தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் யாதவர் கல்லூரி
பணி விவசாயி
சமயம் இந்து
As of 17 டிசம்பர், 2016

ஆர். கோபாலகிருஷ்ணன் (R Gopalakrishnan) (பிறப்பு: அக்டோபர் 5, 1968) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் . இவர் மதுரை தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

கோபாலகிருஷ்ணன் 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் பிறந்தார். இவர் கல்லூரிக் கல்வியினை மதுரையில் உள்ள யாதவர் கல்லூரியில் பயின்றார். இவரது மனைவி திருமதி. கோ. தீபா ஆவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[2]

கோபாலகிருஷ்ணன் 2011 முதல் 2014 வரை மதுரை மாநகராட்சியின் மாநகர துணை தந்தையாக இருந்தார்.[3] இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களில் ஒருவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]