ஆர். கேசவ ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். கேசவ ஐயங்கார்
பிறப்பு1892
இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
தேசியம் இந்தியா
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஇந்து சட்ட மேதை

ஆர்.கேசவ ஐயங்கார் (conspiracy fiction) ஒரு மூத்த வழக்கறிஞராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றினார். அவர் அங்கும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அவர் இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் 1892 ல் பிறந்தார். அவர் இந்திய நீதிமன்றங்களுக்கான ரிட் மனுவை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றினார். இந்து சட்டம் குறித்த நிபுணத்துவம் மிக்கவராகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவராவார். அதுமட்டுமல்லாது இந்திய நாட்டில் நீண்டகாலம் பணியாற்றிய வழக்கறிஞர்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார். அவர் மூத்த வழக்கறிஞராக இருந்ததோடல்லாமல், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிஞராகவும் திகழ்ந்தார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தலைமைப்பதவி வகித்தார்.

நவம்பர் 9, 1991 ஆம் ஆண்டு தனது 99 ஆவது அகவையில் மரணமடைந்தார்.

படைப்புகள்[தொகு]

பார்த்தசாரதிமாலை, திருப்பதிகைமாலை,ஆண்டாள்மாலை போன்ற நூல்கள் அவர் இயற்றியவை ஆகும். ஸ்ரீவத்சங்கராச்சர்யாவின் 'வேதாந்த தேசிகரின் சாததுஷானி என்ற நூல் வெளியிடப்பட்டது.[1] அந்நூலில் ஆர்.கேசவ ஐயங்காரின் அறிவுத்திறன்மிக்க படைப்புகள் குறித்து விரிவான முன்னுரை அளிக்கப்பட்டுள்ளது. தமிழில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் பற்றிய ”வள்ளுவர் உள்ளம்” என்ற நூல் அவரது மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. விவாதத்திற்குரிய அவரது இந்தப் படைப்பு வேத சித்தாந்தங்களுக்கும் இந்துமத தத்துவங்களுக்கும் திருக்குறள் அப்பாற்பட்டது என்ற திராவிட இயக்க அறிஞர்களின் கருத்தைப் புறக்கணிப்பதாக உள்ளது. திருக்குறள் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் சங்ககால இந்துமத நூல்களையும் சம்ஸ்கிருத இலக்கியத்தையும் மேற்கோள்காட்டி திருக்குறள் வேதமரபின் அங்கம் என்பதையும் அவரது படைப்பு ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது. இந்தியன் எக்ஸ்பிரஸ். என்ற செய்தித்தாளில் அவரது நூல் குறித்து உயர்வாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சரணாகதி குறித்து விரிவாக விளக்கிக் கூறும் 'அடியவருக்கு மெய்யன் அருள்' என்ற நூலையும் அவர் இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Honour for illustrious scholars". The Hindu. 2001-08-31 இம் மூலத்தில் இருந்து 2021-02-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210226033925/http://www.hinduonnet.com/2001/08/31/stories/13310783.htm. பார்த்த நாள்: 2014-03-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கேசவ_ஐயங்கார்&oldid=3306139" இலிருந்து மீள்விக்கப்பட்டது