ஆர். காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். காந்தி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஏப்ரல் 3, 2014
தனிநபர் தகவல்
பிறப்பு 1956
தமிழ் நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
கல்வி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அமெரிக்க பல்கலைக்கழகம்
பணி வங்கியாளர்
சமயம் இந்து

ஆர். காந்தி (R. Gandhi) இவர் இந்திய இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆனந்த் ஷா என்பவர் பணி ஓய்வு அடைந்ததையடுத்து இந்த பதவிக்கு உயர்ந்துள்ளார்.[1] இவர் வங்கிகளின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி, இடர் கண்காணிப்பு, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் கண்காணிப்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டவிவகாரங்கள், செலவினம் மற்றும் பட்ஜெட் கட்டுப்பாடு போன்றவை இவரது கட்டுப்பாட்டில் உள்ளன..[2] மேலும் இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராகவும் வங்கி தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IDRBT) இயக்குநராகவும் இருந்தவராவார்.

இளமை வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் 1956ஆம் ஆண்டு பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகத்திலும், நியூ யார்க் நகர பல்கலைக்கழகத்திலும் மூலதன சந்தைகள் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அடிப்படையில் கணித பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ள இவர் கணினி துறையில் கணினி நிரலாக்க திறமையும் பெற்றுள்ளார். இவர் மதுரை பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனைகளைப் படித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி தொழில்[தொகு]

1980ம் ஆண்டு முதல் இந்திய நடுவண் வங்கியில் பணியில் சேர்ந்தார். செபிக்காக சிறப்பான சேவை வழங்கியுள்ளார். இன்றுவரை 33 வருடங்களாக சேவை செய்து வந்துள்ளார்.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி நடுவண் வங்கியில் செயல் நிலை இயக்குநராக உயர்த்தப்பட்டார். பின்னர் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.[3]

முக்கிய பணிகள்[தொகு]

  • நிர்வாக இயக்குநர், இந்திய இந்திய நடுவண் வங்கி
  • இயக்குனர், வங்கி தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
  • தலைவர், சிறந்த அரசு பத்திர ஒருங்கிணைப்பு ரிசர்வ் வங்கி குழு
  • தலைவர், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயற்குழு
  • தலைவர், கடன் அட்டைகள் ஒழுங்குபடுத்தல் குழு தலைவர்.
  • தலைவர், அரசு பத்திரங்கள் வட்டி விகித குழு
  • தலைவர், சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தல் குழு (OTC)

வெளி இணைப்புகள்[தொகு]

R Gandhi - Executive Profile

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._காந்தி&oldid=2225910" இருந்து மீள்விக்கப்பட்டது