ஆர். கனகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். கனகராஜ் (R. Kanagaraj, இறப்பு: 21 மார்ச் 2019) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டத்திற்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையத்தில் வசித்து வந்தார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சூலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த வேட்பாளர் வி. எம். சி. மனோகரனை விட 36, 631 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[1][2] இவர் மார்ச் 21, 2019 அன்று காலை 7.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.இவரின் உடன் காமநாயக்கன் பாளையம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu Assembly Election Results 2016". Election.in. பார்த்த நாள் 21 மார்ச் 2019.
  2. "15th Assembly". Tamil Nadu Legislative Assembly. பார்த்த நாள் 21 மார்ச் 2019.
  3. "சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்". தினமலர் (21 மார்ச் 2019). பார்த்த நாள் 21 மார்ச் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கனகராஜ்&oldid=2759297" இருந்து மீள்விக்கப்பட்டது