ஆர். எம். பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். எம். பழனிசாமி (R. M. Palanisami) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த பழனிசாமி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு இளங்கலை படிப்பினை முடித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இவர், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2011ஆம் ஆண்டு மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PALANISAMI.R.M(Indian National Congress(INC)):Constituency- Modakurichi(Erode ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
  2. "Palanisamy Rm(Indian National Congress(INC)):Constituency- MODAKKURICHI(ERODE) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எம்._பழனிசாமி&oldid=3408356" இலிருந்து மீள்விக்கப்பட்டது