ஆர். எம். பலாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமுண்ணி மேனன் பலாட் (Ramunni Menon Palat) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர், நிலக்கிழார், சென்னை மாகாண அரசியல்வாதியவாவார். இவர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடிதவர்.[1] இவர் மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை அமைச்சராக கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் அமைசரவையில் 1 ஏப்ரல்-14 சூலை 1937 காலகட்டத்தில் இருந்தார். இவர் ஒரு சமீன்தார் (நிலக்கிழார்) ஆவார். இவர் மேற்கு கடற்கரை (மலபார்) நிலக்கிழார் தொகுதியில் இருந்து சென்னை மாகாணத்துக்கு 1930-36 கால கட்டத்தில் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படாடார்.[2] மலபார் மாவட்டத்தில் தலித்துகள் கோயிலில் நுழையும் உரிமைக்காக சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மலபார் கோயில் கோயில் நுழைவு சட்டத்தை எதிர்த்த இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் இவர் ஆவார்.[3] பிற்காலத்தில் இவர் இந்து மகாசபை உறுப்பனராக ஆனார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் ஒரு தலைவரான சி. சங்கரன் நாயரின் மகன் மற்றும் கே. பி. எஸ் மேன்னின் மைத்துனர் ஆவார்.[4][5][6][7][8] இவரின் பேத்திதான் இந்தி நடிகை திவ்யா பாலட்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Independent Labour Party (Great Britain) (1973). Socialist review, Volumes 19-20. Kraus Reprint. பக். 42. http://books.google.co.in/books?id=3owZAAAAMAAJ&q=RM+Palat&dq=RM+Palat&hl=en&ei=4VFSTI6xJJS3rAf9zsjeAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CD4Q6AEwBA. 
  2. Debates; Official Report , Volume 52. Madras Legislative Council. 1963. http://books.google.co.in/books?id=0HgeAQAAIAAJ&q=RM+Palat&dq=RM+Palat&hl=en&ei=4VFSTI6xJJS3rAf9zsjeAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDAQ6AEwAQ. 
  3. Itihas,. 11. Andhra Pradesh archives. பக். 152. http://books.google.com/books?id=pApDAAAAYAAJ&q=RM+Palat+malabar&dq=RM+Palat+malabar&lr=&client=firefox-a&cd=6. 
  4. Justice Party Golden Jubilee Souvenir, 1968. பக். 50–70. 
  5. Reed, Stanley (1943). The Times of India directory and year book including who's who. 20. Bennett, Coleman & Co.,. பக். 116. http://books.google.com/books?id=vqgSAAAAIAAJ&q=r+m+palat&dq=r+m+palat&lr=&client=firefox-a&cd=14. 
  6. Ralhan, Om Prakash (1998). Encyclopaedia Of Political Parties. 33-50. Anmol Publications PVT. LTD. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7488-865-5. http://books.google.com/books?id=729dKCZwym8C&pg=PA49. 
  7. Ramanathan, K. V (2008). The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian,. 1. Pearson Education India. பக். 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1488-1. http://books.google.com/books?id=NY_XjIE6sVUC&pg=PA342. 
  8. Kumara Padmanabha Sivasankara Menon (1979). Memories and musings. Allied. பக். 292. http://books.google.com/books?id=3skBAAAAMAAJ&q=r+m+palat&dq=r+m+palat&lr=&client=firefox-a&cd=39. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எம்._பலாட்&oldid=2444906" இருந்து மீள்விக்கப்பட்டது