ஆர். எசு. முனிரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். எசு. முனிரத்தினம் (Ravilla. S. Munirathinam) ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 19771980 மற்றும் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] .

இவர் ஆர். எம். கே பொறியியல் கல்லூரி, ஆர். எம். டி பொறியியல் கல்லூரி, ஆர். எம். கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் நிறுவனரும் ஆவார். இந்நிறுவனத்தார் சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள ஆர். எம். கே பள்ளி என்னும் பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்கியுள்ளனர். நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி ஒன்றையும், சிறீ துர்காதேவி தொழில் நுட்பக் கல்லூரியையும் நடத்தி வருகின்றனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]