ஆர். இந்திரகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். இந்திரகுமாரி என்பவர் ஒரு இந்திய அரசியலவாதி மற்றும் முன்னாள் தமிழக அமைச்சராவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 96 வரை பொறுப்பு வகித்தார். இவர் 2006இல் தி.மு.க வில் இணைந்தார்.[2][3]

ஊழல் வழக்கில் சிறை தண்டனை[தொகு]

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இந்திராகுமாரி இருந்த போது அவர் மீது 1997-இல் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திராகுமாரிக்கு 29 செப்டம்பர் 2021 அன்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. [4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._இந்திரகுமாரி&oldid=3289643" இருந்து மீள்விக்கப்பட்டது