ஆர். ஆவுடையப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். ஆவுடையப்பன் (R. Avudaiyappan) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகரும் ஆவார். 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

2006 முதல் 2011 வரை தமிழ்நாடு மாநில சட்டமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் சுப்பையாவிடம் தோல்வியடைந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளரான முருகையா பாண்டியனிடம் மீண்டும் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஆவுடையப்பன்&oldid=2718978" இருந்து மீள்விக்கப்பட்டது