ஆர்-பேரங்காடி
தோற்றம்

ஆர்-பேரங்காடி (R-Mall) இந்தியாவிலுள்ள மும்பையின் புறநகர்ப் பகுதியான முலுண்டில் அமைந்துள்ளது.[1] இப்பேரங்காடி 2003 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இரன்வால் டெவலப்பர்சு என்ற தனியார் நிறுவனம் இப்பேரங்காடியை உருவாக்கியது.[2] 700 அடி (210 மீ) முன்பக்கத்துடன் கூடிய 250,000 சதுர அடி (23,000 மீ2) பரப்பளவு கொண்ட இப்பேரங்காடியை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சாப்மேன் டெய்லர் & பங்குதாரர்கள் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஆர் பேரங்காடியில் ஒவ்வொரு தளத்திலும் சுமார் 80,000 சதுர அடி (7,000 மீ2) பரப்பளவைக் கொண்ட 4-மாடி குளிரூட்டப்பட்ட கட்டடங்கள் உள்ளன. ஆர்-பேரங்காடியில் 7 நிலை நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிட வசதி உள்ளது.[3] மும்பையின் இரண்டாவது பழமையான பேரங்காடியாகவும், மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள பழமையான பேரங்காடியாகவும் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Short circuit caused R Mall fire". expressindia.com. 2005-04-17. Archived from the original on 27 April 2005. Retrieved 2010-10-29.
- ↑ "R Mall Opened". expressindia.com. 2003-07-20. Retrieved 2010-10-29.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ TNN (2003-04-05). "A slew of shopping malls mushrooms in the suburbs". The Times of India. Archived from the original on 2012-11-03. Retrieved 2010-10-29.