ஆர்யா இராசேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்யா இராசேந்திரன்
மாநகரத்தந்தை, திருவனந்தபுரம்
பதவியில்
28 திசம்பர் 2020 – பதவியில்
முன்னையவர்கே. சிறீகுமார்
மாநிலத் தலைவர்
பால சங்கம், கேரளா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சனவரி 1999 (1999-01-12) (அகவை 25)
இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பெற்றோர்(கள்)
  • இராசேந்திரன்
  • ஸ்ரீலதா
கல்விஅனைத்துப் புனிதர்கள் கல்லூரி, திருவனந்தபுரம்

ஆர்யா இராசேந்திரன் (Arya Rajendran) (பிறப்பு: 12 சனவரி 1999) கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராக தனது 21 ஆம் அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.[1][2] இவர் இந்தியாவிலேயே மிக இள வயதில் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.[3] இவர் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகள் வார்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4]

வாழ்க்கை[தொகு]

இவருடைய தந்தை இராசேந்திரன் மின்வினைஞராகவும், தாய் ஸ்ரீலதா ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராகவும் பணிபுரிகிறார்கள்.[5][6] இவர் திருவனந்தபுரத்திலுள்ள அனைத்துப் புனிதர்கள் கல்லூரியில் இளநிலை கணிதவியல் படித்து வருகிறார்.[7]

அரசியல்[தொகு]

ஆர்யா இராசேந்திரன் உலக அளவில் குழந்தைகளின் மிகப்பெரிய அமைப்பான பால சங்கத்தின் கேரள மாநிலத்தலைவராக உள்ளார்.[6] இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[5][8][9] இவர் சாலைப் பகுதி இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[1] 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகள் வார்டில் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிட்டு, எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய சனநாயக முன்னணி வேட்பாளர் ஸ்ரீகலாவைவிட 2,872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "India: 21-year-old student Arya Rajendran set to become mayor in Kerala". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  2. "Arya Rajendran, 21, to be India's Youngest Mayor from Kerala's Capital Thiruvananthapuram". News18 (in ஆங்கிலம்). 2020-12-25. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  3. Staff, Scroll. "21-year-old set to become Thiruvananthapuram mayor, youngest in the country". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  4. https://www.dinamani.com/india/2020/dec/26/the-21-year-old-college-student-is-the-mayor-of-thiruvananthapuram-3531306.html
  5. 5.0 5.1 5.2 "21-year-old BSc student Arya Rajendran to become youngest Mayor in Kerala". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  6. 6.0 6.1 "Meet Arya Rajendran, electrician's daughter set to become Thiruvananthapuram city mayor, youngest in India". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-12-25. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  7. "Arya Rajendran, 21, chosen country's youngest Mayor from Thiruvananthapuram". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-12-25. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  8. "At 21, Arya Rajendran is all set to become India's youngest mayor". WION (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  9. "21-yr-old Arya Rajendran may be Thiruvananthapuram's new Mayor". The News Minute (in ஆங்கிலம்). 2020-12-25. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யா_இராசேந்திரன்&oldid=3688999" இலிருந்து மீள்விக்கப்பட்டது