ஆர்யாதன் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்யாதன் முகமது
முன்னாள் மிதுறை அமைச்சர், கேரள அரசு
பதவியில்
23 மே 2011 – 19 மே 2016
ஆளுநர்எச். ஆர். பரத்வாஜ்
முன்னையவர்ஏ. கே. பாலன்
தொகுதிநிலம்பூர், மலப்புறம் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மே 1935 (1935-05-15) (அகவை 88)
நிலம்பூர், மலப்புறம் மாவட்டம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மரியும்மா
பிள்ளைகள்ஆர்யாதன் சௌகத் உடபட இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும்
வாழிடம்(s)நிலம்பூர், கேரளம்
As of 8 Nov, 2012
மூலம்: kerala.gov.in

ஆர்யாதன் முகமது (Aryadan Muhammed) ஓர் இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், உம்மன் சாண்டி அமைச்சகத்தில் ( கேரள அரசு ) முன்னாள் மின்சார மற்றும் போக்குவரத்து அமைச்சருமாவார். 2011 மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கேரளாவின் நிலம்பூர் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

ஆர்யாதன் முகமது 15 மே 1935 இல் உன்னீன் - கட்டியமுன்னி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இவர் மரியும்மா என்பவரை வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1952இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராக அரசியலில் நுழைந்த முகம்மது, 1958 முதல் கேரள பிரதேச காங்கிரசு குழு உறுப்பினராக இருந்தார். பின்னர், கோழிக்கோடு மாவட்டச் செயலாளராகவும், மலப்புறம் மாவட்டத்தலைவராகவும், கேரள பிரதேச பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். ஐம்பதுகளில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (ஐஎன்டியுசி) தீவிர உறுப்பினராக இருந்த இவர் பல்வேறு தொழிலாளர் சங்கங்களின் தலைவராகவும் இருந்துள்ளார்.[1]

முகமது கேரள சட்டமன்றத்திற்கு முதல் முறையாக 1977இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980இல் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து, 8வது சட்டமன்றம் முதல் 13வது சட்டமன்றம் வரை (1987, 1991, 1996, 2001, 2006, 2011) இவர் அதே நிலம்பூர் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.[1]

மாநில அமைச்சர்[தொகு]

ஜனவரி 1980 முதல் அக்டோபர் 1981 வரை, முகமது எ. கி. நாயனார் தலைமையிலான அமைச்சகத்தில் தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர், ஏப்ரல் 1995 முதல் மே 1996 வரை, அ. கு. ஆன்டனி தலைமையிலான அமைச்சகத்தில் தொழிலாளர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சகத்தில் (2004-2006) இவர் செப்டம்பர் 2004 முதல் மின்வாரியத் துறை அமைச்சராக இருந்தார்.[1]

முகமது, 2011 முதல் 2016 வரை இரண்டாவது உம்மன் சாண்டி அமைச்சகத்தில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். இவரது துறையில் மின்சாரம், இரயில்வே, தபால் மற்றும் தந்தி, சாலை போக்குவரத்து, மோட்டார் வாகனங்கள் மற்றும் நீர் போக்குவரத்து ஆகியவையும் அடங்கும்..[2]

கேரள சட்டமன்ற வெற்றிகள்
வருடம் தொகுதி எதிர்த்து போட்டியிட்டவர் பெரும்பான்மை (ஓட்டுகள்)
1977 நிலம்பூர் சைதாலிகுட்டி (இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்)) 7,715[3]
1980 நிலம்பூர் எம். ஆர். சந்திரன் ( இந்திய தேசிய காங்கிரசு ) 17,841[4]
1987 நிலம்பூர் தேவதாசு பொட்டேகாடு (இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) 10,333[5]
1991 நிலம்பூர் அப்துரகுமான் மாஸ்டர் (சுயேட்சை) 7,684[6]
1996 நிலம்பூர் பேராசிரியர் தாமஸ் மேத்யூ (சுயேட்சை) 6,693[7]
2001 நிலம்பூர் பி. அன்வர் மாஸ்டர் (சுயேட்சை) 21,620[8]
2006 நிலம்பூர் சிறீராம கிருஷ்ணன் (இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) 18,171[9]
2011 நிலம்பூர் பேராசிரியர் தாமஸ் மேத்யூ (சுயேட்சை) 5,598[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Aryadan Muhammed" (PDF). Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  2. "Official Website of Kerala Chief Minister". www.keralacm.gov.in.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "CEO Kerala :: Bye Election - LAC". www.ceo.kerala.gov.in.
  5. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. "Archived copy". Archived from the original on 10 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யாதன்_முகமது&oldid=3212725" இலிருந்து மீள்விக்கப்பட்டது