ஆர்யப்பட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர்யப்பட்டா இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் "ஆர்யப்பட்டா"என்று அழைக்கப்பட்டது.அர்யப்பட்டா என்ற செயற்கைகோளிர்க்கும்,ஆர்யாப்பட்டருக்கும் தொடர்பு உண்டு.

ஆர்யபட்டர்[தொகு]

இவர் ஒரு வானியல் அறிஞர்.இவர் பீகாரில் குசுமாபுர என்ற ஊரில் கி,பி.476 ம் ஆண்டு பிறந்தார்.இவர் 'ஆர்யபாடிய'என்ற நூலை எழுதினார்.அக்காலத்தில் இவர் சிறந்த கணிதவியல் அறிஞராகவும்,விண்வெளி ஆராய்ச்சியாளராகவும் விளங்கினர்.இவரின் நினைவாகவே இந்தியா தனது முதலாம் செயற்கைகோளுக்கு "ஆர்யப்பட்டா" என்று பெயரிட்டது.

செயற்கைகோள் ஆர்யப்பட்டா[தொகு]

1975 ம் ஆண்டு ஏப்ரல் 19 ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மறக்கமுடியாத நாள்.அன்றுதான் இந்தியா தனது முதலாம் செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பியது.இந்த செயற்கைக்கோள் 360 கிலோ எடையுடையது, இது 26 பக்க கோணங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது.இச்செயர்க்கைகோளை தயாரிக்க அப்போதைய சோவியத் யூனியன் பெரிது உதவியது.கர்நாடக்கத்தின் தலை நகரமான பெங்களூரில் அருகிலுள்ள "பெண்யா"என்ற இடத்தில செயற்கைகொள் தயாரிக்கும் பணிதொடங்கியது.இந்த செயற்கைகோள் ரஷ்யாவில் உள்ள "க்பூச்டியன்யார்"என்ற இடத்திலிருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது.இது பூமியின் மையமாக இருக்கும் பூமத்தியரேகை கோட்டை புள்ளியாக கொண்டு பூமிக்கு மேல் 619 கி.மீ. தொலைவில் சுழன்றுவரத் தொடங்கியது.

நோக்கம்[தொகு]

பூமியை சுற்றியுள்ள மின்சக்தி பொருந்திய பரமணுவின் தன்மை,சூரியனிடமிருந்து வெளிப்படும் எக்ஸ்ரே கதிர்கள் அறியும் பொருட்டு தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.ஆனால் 5 நாட்கள் செயல்பட்டு பின்பு செயற்கைகொளிற்கு மின்சாரத்தை தரும் பகுதி பழுதடைந்டைந்ததால் தொடர்ந்து செயல்படாமல் போனது.

பங்களித்தவர்கள்[தொகு]

இச்செயற்கைக்கோளை தயாரிப்பதில் இந்திய மற்றும் சோவியத் நாட்டை சார்ந்தவர்கள் இணைந்து செயல்பட்டனர்.குறிப்பாக விக்ரம் சாராபாய்,யு.ஆர்.ராவ்,வேன்னோடி போன்றோர் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

பார்வை நூல்[தொகு]

வியப்பூட்டும் விண்வெளி,முத்துசெல்லக்குமார்,அருணா பப்ளிகேஷன்,சென்னை.49

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யப்பட்டா&oldid=2723456" இருந்து மீள்விக்கப்பட்டது