உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மல் மிளகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மல் மிளகாய்
2021 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம்,17 தேதியன்று வெளியிடப்பட்ட அஞ்சல் உறையின் ஆர்மல் மிளகாய் முன்பக்க படம்
2021 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம்,17 தேதியன்று வெளியிடப்பட்ட அஞ்சல் உறையின் ஆர்மல் மிளகாய் முன்பக்க படம்
இனம்கேப்சியம் ஆனம்
தோற்றம்கோவா, இந்தியா

ஆர்மல் மிளகாய் (Harmal chilli) என்பது இந்தியாவில் உள்ள கோவா மாநிலத்தில் பயிரிடப்படும் ஒரு வகை மிளகாய் ஆகும்.[1] [2][3][4]

பெயர்

[தொகு]

இந்த வகை மிளகாய் கோவாவின் பெர்னெம் பகுதியில் அமைந்துள்ள ஆர்மல் என்ற இடத்தில் தோன்றியதாகும். இந்த இடம் எனும் கடலோர கிராமத்தின் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றது.[5][6]மிதமான முதல் அதிக அளவிலான காரத்தன்மை கொண்ட, வழவழப்பான மேற்பரப்புடைய இந்தச் சிவப்பு மிளகாய், கோவாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. மேலும் இது 'சிக்கன் சாகுட்டி' 'விண்டாலூ' மற்றும் பிற கோவா உணவு வகைகளைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[7]

உள்ளூர் பெயர்

[தொகு]

இது ஆர்மல் மிர்சாங் என்று அழைக்கப்படுகிறது - கொங்கணி மாநில மொழியில் மிர்சாங் என்றால் மிளகாய் என்று பொருளாகும்.

சாகுபடி

[தொகு]

ஆர்மல் மிளகாய் முக்கியமாக கோவாவின் அரம்போலில் உள்ள செம்மண்ணில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு இது வீட்டுத் தோட்டங்களில் செழித்து வளர்கின்றது.[8]

உடல் பண்புகள்

[தொகு]

இந்த வகை மிளகாய் 2.7-3.7 செ.மீ நீளம் கொண்டது, செம்பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. மேலும் மென்மையான தோல் அமைப்பைக் கொண்டுள்ளது.

காரத்தன்மை மற்றும் பயன்பாடு

[தொகு]

இதன் அதிக காரத்தன்மையினால் ஆர்மல் மிளகாய் தூளின் ஒரு சிறிய அளவு கூட உணவுகளுக்கு குறிப்பிடத்தக்க சுவையை சேர்க்க போதுமானதா இருகின்றது. இதன் தீவிரமான காரத்தன்மையின் காரணமாக, சிக்கன் சகுதி மசாலா, கரம் மசாலா, கட்கதேம், ரெச்சாடோ மசாலா போன்ற புகழ்பெற்ற கோவா சமையல் தயாரிப்புகளை உருவாக்க இது பெரும்பாலும் மற்ற மசாலாப் பொருட்களுடன் கலக்கப்பட்டு வருகின்றது.

புகைப்படத் தொகுப்பு

[தொகு]

ஆர்மல்-பெர்னெம் மிளகாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், புவிசார் குறியீட்டிற்காக விண்ணப்பித்த முதன்மை விண்ணப்பதாரரான லவு அங்குஷ் தாக்கூர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட அசல் புகைப்படங்கள்.[9]

புவியியல் குறியீடு

[தொகு]

இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் புவியியல் குறியீடுகள் பதிவகத்தால், 2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 14ஆம் தேதி அன்று இதற்குப் 'புவியியல் குறியீடு' தரம் வழங்கப்பட்டது.[14]

பெர்னெம் பகுதியைச் சேர்ந்த 'ஆர்மல்-பெர்னெம் மிளகாய் உற்பத்தியாளர்கள் சங்கம்' ஆர்மல் மிளகாய்க்குப் புவியியல் குறியீடு பதிவு கோரி முன்மொழிந்தது. மே 2020-ஆம் ஆண்டில் இதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டில் சென்னையில் அமைந்துள்ள புவியியல் குறியீடுகள் பதிவகத்தால் இம்மளகாய்க்கு ஜிஐ குறியீடு வழங்கப்பட்டது. இதன் மூலம், "ஆர்மல் மிளகாய்" எனும் பெயர் அப்பகுதியில் விளையும் மிளகாய்களுக்கு மட்டுமே உரித்தானதாக மாறியது. இதன் வாயிலாக, கோவா மாநிலத்திலிருந்து 'கோலா மிளகாய்க்கு' அடுத்தபடியாக ஜிஐ குறியீட்டைப் பெறும் இரண்டாவது மிளகாய் வகையாகவும், கோவாவிலிருந்து இக்குறியீட்டைப் பெறும் மூன்றாவது வகை பொருளாகவும் இது இடம்பிடித்தது.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "17 types of chillies grown in India, their uses and spiciness". https://recipes.timesofindia.com/web-stories/17-types-of-chillies-grown-in-india-their-uses-and-spiciness/photostory/98337145.cms.
  2. GI Journal No. 137 1 May 29, 2020 (PDF). GI Journal No. 137 1 May 29, 2020 Official website of Intellectual Property India. p. 8. Retrieved 24 September 2024.
  3. Variyar, Prasad S.; Singh, Inder Pal; Adiani, Vanshika; Suprasanna, Penna (8 November 2024). Peppers: Biological, Health, and Postharvest Perspectives (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-1-040-15384-0. Retrieved 6 November 2024.
  4. Ltd, Info Kerala Communications Pvt (10 October 2022). Kerala Tradition & Fascinating Destinations 2022 (in ஆங்கிலம்). Info Kerala Communications Pvt Ltd. ISBN 978-93-91760-02-1. Retrieved 6 November 2024.
  5. Ravindran, P. N.; Sivaraman, K.; Devasahayam, S.; Babu, K. Nirmal (2024). Handbook of Spices in India: 75 Years of Research and Development (in ஆங்கிலம்). Springer Nature. ISBN 978-981-19-3728-6. Retrieved 6 November 2024.
  6. "A tourist village rooted in religion". The Times of India. 28 November 2017. https://timesofindia.indiatimes.com/city/goa/a-tourist-village-rooted-in-religion/articleshow/61827050.cms.
  7. Sen, Colleen Taylor; Bhattacharyya, Sourish; Saberi, Helen (23 February 2023). The Bloomsbury Handbook of Indian Cuisine (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. ISBN 978-1-350-12864-4. Retrieved 6 November 2024.
  8. "Goa: Moira bananas, Harmal chillies get GI tag". The Times of India. 1 August 2020. https://timesofindia.indiatimes.com/city/goa/moira-bananas-harmal-chillies-get-gi-tag/articleshow/77294024.cms.
  9. "GI tagged, but what’s the future?". The Times of India. 28 March 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/events/goa/gi-tagged-but-whats-the-future/articleshow/99060744.cms.
  10. Team, Herald (21 May 2024). "Biodiversity in Goa through the world of philately" (in en). Herald Goa. https://www.heraldgoa.in/Cafe/Biodiversity-in-Goa-through-the-world-of-philately/221636.
  11. "Goan food becomes philatelic material". The Times of India. 18 December 2021. https://timesofindia.indiatimes.com/city/goa/goan-food-becomes-philatelic-material/articleshow/88350516.cms.
  12. "PRESIDENT LAYS FOUNDATION STONE FOR NEW RAJ BHAVAN – Department of Information and Publicity". Department of Information and Publicity Goa, India. 15 June 2022. https://dip.goa.gov.in/2022/06/15/president-lays-foundation-stone-for-new-raj-bhavan/.
  13. Times, Navhind (15 June 2022). "Big push to new Raj Bhavan". The Navhind Times. https://www.navhindtimes.in/2022/06/16/goanews/big-push-to-new-raj-bhavan/.
  14. "Geographical Indications Intellectual Property India". Retrieved 24 September 2024.
  15. Times, Navhind (31 July 2020). "Khaje, Harmal chillies and Moira bananas get GI tag". The Navhind Times. https://www.navhindtimes.in/2020/08/01/goanews/khaje-harmal-chillies-and-moira-bananas-get-gi-tag/.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மல்_மிளகாய்&oldid=4521612" இலிருந்து மீள்விக்கப்பட்டது