ஆர்போரியோ அரிசி

ஆர்போரியோ அரிசி (Arborio rice) என்பது; ஒரு இத்தாலிய நடுத்தர தானிய வகை அரிசி (நெல்) வகையாகும். பியத்மாந்து பிராந்தியத்தில் உள்ள போ பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஆர்போரியோ என்ற நகராட்சியின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. மற்ற வகை அரிசிகளுடன் ஒப்பிடும்போது, இதில் அதிக அளவு அமைலோபெக்டின் மாவுச்சத்து இருப்பதால், சமைக்கும்போது இதன் உருண்டையான தானியங்கள் உறுதியாகவும், பாலாடை பதத்துடனும், மெல்லுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும்.[1] இது ஒரு மாவுச்சத்து சுவையைக் கொண்டுள்ளது மற்றும் மற்ற சுவைகளுடன் நன்கு கலக்கிறது. ஆர்போரியோ அரிசி பெரும்பாலும் அரிசி உணவு வகையான ரிசோட்டோ செய்யப் பயன்படுகிறது; கார்னரோலி, மாராடெல்லி, பால்டோ மற்றும் வியோலோன் நானோ ஆகியவை மற்ற பொருத்தமான நெல் வகைகளாகும். ஆர்போரியோ அரிசி பொதுவாக அரிசிப் பாயசம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
ஆர்போரியோ என்பது ஒரைசா சட்டைவா வகைகளின் சப்போனிகா குழுவைச் சேர்ந்த ஒரு சாகுபடி இரகமாகும்.[4]
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Brauerei Basel". Cooks Illustrated. May 1, 2008. Subscription required for full access.
- ↑ Dorie Greenspan (2006). Baking: From My Home to Yours. Houghton Mifflin Harcourt. pp. 412–. ISBN 0-618-44336-3.
- ↑ Michael Caines (27 November 2014). Michael Caines At Home. Random House. pp. 114–. ISBN 978-1-4481-4948-3.
- ↑ From cool to warm: Making temperate japonica rice more widely available to farmers in tropical Southeast Asia