ஆர்த்தோ அசிட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தோ அசிட்டிக் அமிலம்
Skeletal formula of orthoacetic acid with all implicit hydrogens shown
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்-1,1,1-டிரையால்[1]
இனங்காட்டிகள்
463-83-2 Y
ChemSpider 9128639 N
InChI
  • InChI=1S/C2H6O3/c1-2(3,4)5/h3-5H,1H3 N
    Key: MAYUCBCSAVDUKG-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10953422
SMILES
  • CC(O)(O)O
பண்புகள்
C2H6O3
வாய்ப்பாட்டு எடை 78.07 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஆர்த்தோ அசிட்டிக் அமிலம் (Orthoacetic acid) என்பது C2H6O3 அல்லது H3C-C(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருத்தியல் நிலையிலுள்ள இச்சேர்மம் ஈத்தேன்-1,1,1-டிரையால் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தின் ஐதராக்சில் குழுக்கள் புரோட்டானை இழக்க முடியும் என்பதால் ஈத்தேன் பின்புலத்துடன் கூடிய மூவால்க்ககால் சேர்மமென இது வகைப்படுத்தப்படுகிறது. ஓர் ஆர்த்தோ அசிட்டிக் அமிலம் என்ற கோணத்திலும் இது பார்க்கப்படுகிறது.

ஆர்த்தோ அசிட்டிக் அமிலத்தை தனித்து பிரிக்க இயலாது என்று நம்பப்படுகிறது. ஏனெனில் இது உடனடியாக அசிட்டிக் அமிலம் மற்றும் நீராக சிதைவடைகிறது. அசிட்டிக் அமிலத்தின் நீரிய கரைசல்களில் ஒருவேளை கண நேர நிலைப்புத் தன்மையுடன் இது இருக்கலாம்[2].

ஆர்த்தோ அசிட்டேட்டு எதிர்மின் அயனிகள்[தொகு]

கோட்பாடுகள் அடிப்படையில் ஒன்று முதல் மூன்று புரோட்டான்களை ஐதராக்சில் குழுக்களிலிருந்து நீக்குவதனால் ஈரைதரசன் ஆர்த்தோ அசிட்டேட்டு (H5C2O3) , ஐதரசன் ஆர்த்தோ அசிட்டேட்டு (H4C2O2−3), ஆர்த்தோ அசிட்டேட்டு (H3C2O3−3) ஆகிய எதிர்மின் அயனிகள் உருவாகமுடியும். 220° செல்சியசு வெப்பநிலையில் அசிட்டிலீன் மற்றும் சோடியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்து சோடியம் ஆர்த்தோ அசிட்டேட்டை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கிறார்:[3]

C2H2 + 3 NaOH → Na3CH3CO3 + H2.

ஆர்த்தோ அசிட்டேட்டு எசுத்தர்கள்[தொகு]

H3C−C(−O−)3 என்ற மூவிணைதிறன் நோக்குருவுடன் பல நிலையான கரிமச் சேர்மங்கள் கரிம வேதியியலில் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆர்த்தோ அசிட்டிக் அமிலங்களின் எசுத்தர்கள் என்று முறையாக அழைக்கப்படுகின்றன. எனவே இவையெல்லாம் ஆர்த்தோ அசிட்டேட்டுகள் எனப்படுகின்றன. மூவெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு, மூமெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு உள்ள ஆர்த்தோ அசிட்டேட்டுகள் வர்த்தக முறையில் கிடைக்கின்றன.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ethane-1,1,1-triol - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. Yamabe, Shinichi (2003). "A computational study of interactions between acetic acid and water molecules". Journal of Computational Chemistry 24 (8): 939–947. doi:10.1002/jcc.10178. 
  3. Heinrich Feuchter (1914). "Reactions in Molten Alkali Hydroxides". Chem. Zeit. 38: 273–274.