ஆர்த்தோ- சைலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தோ-சைலீன்
o-Xylene
Skeletal formula
Skeletal formula
Space-filling model
Space-filling model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2-சைலீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில் தொலுயீன்
வேறு பெயர்கள்
'ஆ-சைலீன்
இனங்காட்டிகள்
95-47-6 Y
ChEBI CHEBI:28063 Y
ChEMBL ChEMBL45005 Y
ChemSpider 6967 Y
DrugBank DB03029 Y
InChI
  • InChI=1S/C8H10/c1-7-5-3-4-6-8(7)2/h3-6H,1-2H3 Y
    Key: CTQNGGLPUBDAKN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H10/c1-7-5-3-4-6-8(7)2/h3-6H,1-2H3
    Key: CTQNGGLPUBDAKN-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07212 Y
வே.ந.வி.ப எண் ZE2450000
SMILES
  • CC1=C(C)C=CC=C1
UNII Z2474E14QP Y
பண்புகள்
C8H10
வாய்ப்பாட்டு எடை 106.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.88 கி/மி.லி
உருகுநிலை −24 °C (−11 °F; 249 K)
கொதிநிலை 144.4 °C (291.9 °F; 417.5 K)
0.02% (20°செல்சியசு)[1]
எத்தனால்-இல் கரைதிறன் கரையும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் கரையும்
ஆவியமுக்கம் 7 மி,மீபாதரசம் (20°செல்சியசு)[1]
-77.78•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.50545
பிசுக்குமை 1.1049 cP 0 °செல்சியசில்
0.8102 cP 20 °செல்சியசில்
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.64 D [2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn) தீப்பற்றும் (F)
R-சொற்றொடர்கள் R11 R20 R21 R38
S-சொற்றொடர்கள் S25
தீப்பற்றும் வெப்பநிலை 32 °C (90 °F; 305 K)
Autoignition
temperature
463 °C (865 °F; 736 K)[3]
வெடிபொருள் வரம்புகள் 0.9%-6.7%[1]
Threshold Limit Value
மில்லியனுக்கு 100 பகுதிகள் [3] (TWA), மில்லியனுக்கு 150 பகுதிகள்[3] (STEL)
Lethal dose or concentration (LD, LC):
மில்லியனுக்கு 6125 பகுதிகள் (எலி, 12 மணி)
மில்லியனுக்கு 6125 பகுதிகள் (மனிதன், 12 மணி)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm (435 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
தாங்கும் அளவு மில்லியனுக்கு 100 பகுதிகள் (435 மி.கி/மீ 3) எசு.டி அளவு மில்லியனுக்கு 150 பகுதிகள் (655 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
மில்லியனுக்கு 900 பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ஆர்த்தோ-சைலீன் (o-Xylene) என்பது C6H4(CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒர் அரோமாட்டிக் ஐதரோகார்பன் ஆகும். பென்சீன் அரோமேடிக் வளையத்தில் இரண்டு மெத்தில் தொகுதிகள் அடுத்தடுத்த கார்பன் அணுக்களில் ஆர்த்தோ நிலையில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. மெட்டா-சைலீன், பாரா-சைலீன் ஆகியனவற்றின் கட்டமைப்பு மாற்றியனாக இது கருதப்படுகிறது. இவற்றின் கலவை பொதுவாக சைலீன் அல்லது சைலீன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆர்த்தோ- சைலீன் நிறமற்றும் இலேசான எண்ணெய்ப் பசையுடனும் தீப்பற்றி எரியக்கூடிய திண்மமாகவும் காணப்படுகிறது [5].

தயாரிப்பு[தொகு]

பெட்ரோலியத்தில் ஓர் எடை சதவீதம் அளவுக்கு சைலீன்கள் உள்ளன. பெரும்பாலும் ஆர்த்தோ-சைலீன் பெட்ரோலியத்தை சிதைத்தே தயாரிக்கப்படுகிறது. சைலீன் மாற்றியன்கள் உள்ளிட்ட பல அரோமாட்டிக் சேர்மங்கள் இதிலிருந்து கிடைக்கின்றன. மெட்டா-சைலீனை ஆர்த்தோ-சைலீனாக மாற்ற முடியும். 2000 ஆம் ஆண்டில் மட்டும் 500,000 டன் சைலீன்கள் நிகரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

பயன்[தொகு]

பல வேதிப்பொருள்கள், மருந்துகள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமான தாலிக் நீரிலி உற்பத்தியில் ஆர்த்தோ-சைலீன் பெருமளவு பயன்படுகிறது [5].

நச்சுத்தன்மை[தொகு]

சைலின்கள் நச்சுத்தன்மை கொண்டவை அல்ல, எடுத்துக்காட்டாக இவற்றின் உயிர் கொல்லும் அளவு எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் அளவு 4300 மி.கி / கிலோ,கிராம் ஆகும். விலங்கு மற்றும் சைலீன் மாற்றியன்களுக்கு ஏற்ப இந்த அளவு மாறுபடும். சைலீன்கள் போதைப் பொருள் விளைவுகளில் பங்குபெறுகின்றன. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0668". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Rudolph, H.D.; Walzer, K.; Krutzik, Irmhild (1973). "Microwave spectrum, barrier for methyl rotation, methyl conformation, and dipole moment of ortho-xylene". Journal of Molecular Spectroscopy 47 (2): 314. doi:10.1016/0022-2852(73)90016-7. Bibcode: 1973JMoSp..47..314R. 
  3. 3.0 3.1 3.2 "o-Xylene". International Chemical Safety Cards. ICSC/NIOSH. July 1, 2014.
  4. "Xylene (o-, m-, p-isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. 5.0 5.1 5.2 "Xylenes]". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2000). Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_433. ISBN 3527306730. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தோ-_சைலீன்&oldid=2957058" இலிருந்து மீள்விக்கப்பட்டது