ஆர்த்தி வெங்கடேஷ்
ஆர்த்தி வெங்கடேஷ் | |
---|---|
பிறப்பு | 23-நவம்பர்-1989 சென்னை, இந்தியா |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | ஆர்த்தி அனிருத்தா |
கல்வி | காட்சித் தொடர்பியலில் துறை |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | வடிவழகி, நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது வரை |
உயரம் | 5ft 9in |
வாழ்க்கைத் துணை | அனிருத்தா சிரிகாந்த் (2012-2015) |
ஆர்த்தி வெங்கடேஷ் ( Arthi Venkatesh ) ஒரு இந்திய வடிவழகியும் சென்னையைச் சேர்ந்த சமூகவாதியுமாவார்.[1][2] 2000 களின் பிற்பகுதியில் விளம்பரங்களில் தோன்றிய பிறகு, பிஜாய் நம்பியாரின் இருமொழித் திரைப்படமான சோலோ (2017) மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[3]
தொழில்
[தொகு]ஆர்த்தி வெங்கடேஷ், சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை இலயோலாக் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்ற பின்னர் பெங்களூரில் உட்புற வடிவமைப்பில் படிப்பைத் தொடர்ந்தார்.[4] பெங்களூரில் இருந்த காலத்தில், அழகுக் கலை ஒப்பனையாளர் பிரசாத் பிடாபாவுடன் பழகினார். அவர் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து ஆர்த்தி அதில் ஈடுபட்டார்.[4][5]
அழகுக் கலைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடர சிலகாலம் நியூயார்க்கிற்குச் சென்றார்.[6] சர்வதேச அழகுக் கலைத்துறையில் இவரது முதல் அறிமுகம் நியூயார்க் ஃபேஷன் வீக்கின் போது நடந்தது.[7] சென்னையில் ஒரு சமூகவாதியாக கருதப்படுகிறார்.[8][9][10][11] 2017 ஆம் ஆண்டு வரை, ஆர்த்தி சுமார் 250 ஓடுபாதை நிகழ்ச்சிகளையும் 350 க்கும் மேற்பட்ட புகைப்பட நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.[7][12]
மணிரத்னம் மற்றும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஷானூ சர்மாவின் போன்றவர்களிடமிருந்து நடிப்பு வாய்ப்புகளைப் பெற்ற போதிலும், ஆர்த்தி தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் திரைப்படத் துறையில் நுழைய தயங்கினார்.[13] 2016 ஆம் ஆண்டில், இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஆர்த்தி, படத்தில் பணியாற்றுவதற்காக நடிப்புப் பயிற்சி எடுத்தார். படம் கிடப்பில் போடப்பட்டாலும், பின்னர் அவர் தமிழ்-மலையாளம் இருமொழித் திரைப்படமான சோலோவில் (2017) துல்கர் சல்மானுக்கு இணையாக நடிக்க வாய்ப்பளித்தார். கொச்சியில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தது.[14][15] 2018 இல், சதீஷ் கிருஷ்ணனுடன் "காதலிக்க நேரமில்லை" என்ற உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக தோன்றினார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]இந்தியத் துடுப்பாட்டக்காரர் அனிருத்தா சிரிகாந்த்தைத் திருமணம் செய்து கொண்டார்.[16][17][18]
சான்றுகள்
[தொகு]- ↑ "Arthi Venkatesh A Heroine Is Born". https://www.magzter.com/article/Womens-Interest/Women-Exclusive/Arthi-Venkatesh-A-Heroine-Is-Born.
- ↑ "The Storyteller - Arthi Venkatesh :)". thestoryteller-india.com.
- ↑ "Arthi Venkatesh excited about working with Dulquer Salmaan in Solo". http://www.hindustantimes.com/regional-movies/arthi-venkatesh-excited-about-working-with-dulquer-salmaan-in-solo/story-q9RKkq5NoP0P8GaAuUQtFI.html.
- ↑ 4.0 4.1 "Arthi Venkatesh A Heroine Is Born". https://www.magzter.com/article/Womens-Interest/Women-Exclusive/Arthi-Venkatesh-A-Heroine-Is-Born."Arthi Venkatesh A Heroine Is Born". Magzter. Retrieved 16 January 2018.
- ↑ Rathnam, Shilpa (August 15, 2011). "Clean bowled". India Today.
- ↑ "Feature". NOBE Creative.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 7.0 7.1 "Arthi Venkatesh – Visitors at #Sector16 | Alegria 2020 | The Festival Of Joy | 04 Feb 2020 to 08 Feb 2020 | Pillai College Festival | Dreamland | One Of India's Biggest College Festivals". 25 February 2017. Archived from the original on 23 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Arthi Venkatesh looked pretty at the launch of Charles & Keith festive collection at Express Avenue". The Times of India.
- ↑ "Magnum's Limited-edition Pop-up is the Ultimate Destination for a Luxurious Experience this Festive Season". HospiBuz. 28 October 2019.
- ↑ "Move aside plaits, say hello to pixies". Deccan Chronicle. 29 July 2014.
- ↑ https://www.pressreader.com/india/deccan-chronicle/20130306/282544425728181 – via PressReader.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "Arthi Venkatesh Talks Beauty and Makeup". website. 12 February 2018.
- ↑ Sunder, Gautam (23 November 2016). "Arthi walks beyond the ramp". Deccan Chronicle.
- ↑ "Chennai Model Arthi to debut in Bejoy Nambiar's bilingual - Times of India". The Times of India.
- ↑ "Provoke Lifestyle". Archived from the original on 2023-03-26. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "Peek into the home of cricketer Anirudha Srikkanth & model Arthi : MagnaMags". http://magnamags.com/society-interiors/at-home-with/peek-into-the-home-of-cricketer-anirudha-srikkanth-model-arthi/4264.
- ↑ "Meet Arti Venkatesh - The beauty with brains that you didn't know about!". 16 September 2017.
- ↑ "When Bollywood and Cricket collide!".