உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்தர் பிரான்சிசு ஓ டோனல் அலெக்சாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்த்தர் பிரான்சிசு ஓ டோனெல் அலெக்சாந்தர் (Arthur Francis O'Donel Alexander) (1896–1971) ஓர் ஆங்கிலேயப் பயில்நிலை வானியலாளரும் நூலாசிரியரும் ஆவார். இவர் இவரது கீழ்வரும் நூல்களுக்காகப் பெயர்பெற்றவர். காரிக்கோள் – நோக்கீட்டு, கோட்பாட்டு, கண்டுபிடிப்பு வரலாறு (1962), வருணன்(யுரேனசு) கோள் - நோக்கீட்டு, கோட்பாட்டு, கண்டுபிடிப்பு வரலாறு (1965). இவை இந்தக் கோள்களின் மிக முந்தைய காலத்தில் இருந்து நூல் வெளியீட்டுக் காலம் வரையிலான நோக்கீட்டு வரலாலாற்றுத் தகவல்களைத் தருகின்றன.

இவர் ஓர் வரலாற்றுப் பயில்வாளர். இரண்டாம் உலகப் போரின் நூறாண்டு கால வரலாற்றை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் கல்வியியல் ஆட்சியாளர். இவர் தன் ஓய்வின்போது, யப்பானில் ஆங்கிலம் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்துவிட்டு யப்பானில் இருந்து ஐக்கிய இராச்சியத்துக்கு மீண்டதும், பல ஆண்டுகள் இரவு வானத்தை அக்கறையோடு நோக்கிவரலானார்.

மேற்கோள்கள்[தொகு]

  • Obituary: A. F. O'D Alexander, 1896-1971, Journal of the British Astronomical Association, Volume 83, pages 353 - 355 (1073)