உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்தர் சுட்டான்லி வில்லியம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தர் சுட்டான்லி வில்லியம்சு
Arthur Stanley Williams
பிறப்பு1861
பிரைட்டன், இங்கிலாந்து
இறப்பு21 நவம்பர் 1938
தேசியம்இங்கிலாந்து
துறைவானியலாளர்
பணியிடங்கள்இராயல் வானியல் சங்கம்
விருதுகள்இயாக்சன் குவில்ட்டு பதக்கம் (1923)

ஆர்த்தர் சுட்டான்லி வில்லியம்சு (Arthur Stanley Williams) (1861, பிரிட்டன் – 21 நவம்பர் 1938) ஓர் ஆங்கிலேயப் பயில்நிலை வானியலாளரும் வழக்குரைஞரும் ஆவார். இவர் கோள்களைத் தொலைநோக்கி வழி நோக்கீடு செய்வதில் ஆர்வத்தோடு பங்கேற்றார். இவர் படகோட்டம் சார்ந்த சாலஞ்சர் கோப்பையை 1920 இல் வெல்வதில் முனைவு காட்டினார்.

கோளாய்வுப் பணிகள்[தொகு]

புவி நடுவரையில் உள்ள ஒரு மலையில் தனது 6.5 அங்குல ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியைப் பயன்படுத்திக் கோளாய்வுப் பணிகள் அனைத்தையும் மேற்கொண்டார். இவர் 1896 இல் "பல்வேறு அகலாங்குகளில் வியாழனின் மேற்பரப்பு பொருள்நகர்வு" எனும் கோளியலில் பெருந்தாக்கம் விளைவித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார் இவரது பணி வியாழனை முறையாக நோக்கீடு செய்யும் முயற்சிகளுக்கு வலுவூட்டியது. இவர் 1898 இல் வியாழனின் முகில் பாணிகளை (அவற்றின் பட்டைகளையும் வட்டாரங்களையும்) விவரிக்கும் மிகப் புதிய முறைகளைக் கண்டுபிடித்தார். இவர் நடுவண் அகலாங்கின் கடப்பைப் பயன்படுத்தி, நெட்டாங்கு மேற்பரப்புக் கூறுபாடுகளைத் தீர்மானிக்கும் முறையைக் கண்டறிந்து அதைப் பயன்படுத்துவதற்காக மிகவும் போராடினார்.

இவர் 1899 இல் " வியாழனின் நடுவரைப் பட்டைகளின் வண்ணங்களில் ஏற்படும் பருவமுறை(அலைவுநேர) வேறுபாடுகள்" எனும் கோளியலில் மிகவும் பெருந்தாக்கத்தை விளைவித்த ஆய்வுக் கட்டுரையொன்றையும் வெளியிட்டார்.

இவர் காரிக்கோளின் பொட்டுகளை நோக்கினார். இவர் செவ்வாயில் கால்வாய்கள் எனப்படும் கோட்டுவடிவக் கூறுபாடுகளை கண்டார். இவை மிக முன்பாகவே பொய்த்தோற்றங்கள் என உரைத்த இயூகின் மைக்கேல் அந்தோன்லாடியிடம் ஒப்புக்கொண்டார்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 1994 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் ஆனார். இவருக்கு 1923 இல் ஜாக்சன் குவில்ட் பதக்கம் வழங்கப்பட்டது.

வில்லியம் நிலாக் குழிப்பள்ளமும் செவ்வாய் மொத்தல் பள்ளம் ஒன்றும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது[1] are named in his honor.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arthur S. Williams, British astronomer". Science Photo Library. பார்க்கப்பட்ட நாள் 2017-11-06.

வெளி இணைப்புகள்[தொகு]

நினைவேந்தல்[தொகு]