உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்தரோசுப்பைரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தரோசுப்பைரா
Arthrospira
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆர்த்தரோசுப்பைரா
Arthrospira
இனங்கள்

About 35.

ஆர்த்தரோசுப்பைரா (Arthrospira) என்பது மிதக்கும், இழைபோன்ற, சயனோபாக்டீரியா என்னும் வகையைச் சேர்ந்த உயிரினம். இவை உருளை வடிவ, பல் உயரணுவுடைய, இடஞ்சுழியாய் காணப்படும் டிரைக்கோம் (trichome) (நுண்முடியுடைய) வகை உயிரினம். இவை இயற்கையாய் வெப்பமண்டல, குறைவெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் உயர்ந்த பி.எச் (pH) (உயர் காரத்தன்மை) கொண்ட , கூடுதலான கார்பனேட்டு, பைகார்பனேட்டு அடர்த்திகொண்ட ஏரிகளில் காணப்படுகின்றன. ஆர்த்தரோசுப்பைரா பிளேட்டென்சிசு (Arthrospira platensis) என்னும் வகை ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், தென்னமெரிக்காவிலும் காணப்படுகின்றது, ஆனால் ஆர்த்தரோசுப்பைரா மாக்ஃசிமா (Arthrospira maxima) என்னும் வகை நடு அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றது[1].

மாந்தர்களின் பயன்பாடு[தொகு]

ஆர்த்தரோசுப்பைராவில் இருந்து மாந்தர்களுக்கும் பிற சில விலங்குகளுக்கும் பயன்படும் இசுப்பைருலீனா (Spirulina)என்றழைக்கப்படும் ஊட்டச்சத்து பெறுகின்றார்கள் [2].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள் இலக்கியம்[தொகு]

  1. Vonshak, A. (ed.). Spirulina platensis (Arthrospira): Physiology, Cell-biology and Biotechnology. London: Taylor & Francis, 1997.
  2. Ciferri, O. "Spirulina, the Edible Microorganism." Microbiological Reviews. 47, 4, Dec. 1983. PMCID: PMC283708. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC283708/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தரோசுப்பைரா&oldid=2186252" இலிருந்து மீள்விக்கப்பட்டது