ஆர்தர் பெரிடேல் கீத்து
ஆர்தர் பெரிடேல் கீத்து | |
---|---|
பிறப்பு | 5 ஏப்ரல் 1879 எடின்பரோ |
இறப்பு | 6 அக்டோபர் 1944 (அகவை 65) எடின்பரோ |
படித்த இடங்கள் |
|
பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர் |
ஆர்தர் பெரிடேல் கீத்து (Arthur Berriedale Keith) (5 ஏப்ரல் 1879 - 6 அக்டோபர் 1944) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்சட்ட சட்டவல்லுனரும், சமசுக்கிருதம், இந்தியவியல் அறிஞரும் ஆவார். இவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமசுக்கிருதத்துக்கான அரசப் பேராசிரியராகவும், அரசியல்சட்ட வரலாற்றுக்கான விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1914 முதல் 1944 வரை 30 ஆண்டுகள் கீத்து இப்பணியில் இருந்தார்.
நூல்கள்[தொகு]
அரசியல் சட்டம் அதன் வரலாறு என்பன தொடர்பிலும் இந்தியவியல் தொடர்பிலும் ஆங்கிலத்தில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.[1] இந்தியத் தொன்மவியல் (Indian Mythology)-1917, வேதங்களினதும் உபநிடதங்களினதும் சமயமும் மெய்யியலும் (The Religion and Philosophy of the Veda and Upanishads)-1925, சாங்கிய முறை: சாங்கிய மெய்யியல் வரலாறு (The Samkhya System: A History of the Samkhya Philosophy)-1918, இந்தியாவில் பௌத்த மெய்யியல் (Buddhist Philosophy in India), சமசுக்கிருத இலக்கியத்தின் வரலாறு (A History of Sanskrit Literature)-1920 ஆகியவை இந்தியவியலில் இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, ஐத்தரேய ஆரண்யகம், தைத்திரீய சம்கிதை, ரிக் வேத பிராமணங்களான ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம் ஆகியவற்றை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இறப்பு[தொகு]
6 அக்டோபர் 1944ல் கீத்து காலமானார். இவரது உடல் எடின்பரோவில் உள்ள கிராங்கே மயானத்தில் இவரது மனைவி மார்கிரெட் பல்ஃபர் அலனின் உடலுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.