உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்தர் அரசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன் இருக்கும் ஆர்தர் அரசரின் திரைச்சீலை, சுமார் 1385[1]

ஆர்தர் அரசர் (King Arthur) பிரித்தானியாவின் மன்னராக இருந்தார். இவர் ஒரு நாட்டுப்புறக் கதாநாயகனாகவும், பிரித்தானிய விவகாரம் என அழைக்கப்படும் இடைக்கால இலக்கியப் பாரம்பரியத்தில் ஒரு மைய நபராகவும் உள்ளார்.

வேல்சிய ஆதாரங்களில், ஆர்தர் கிபி 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 6-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆங்கிலோ-சாக்சன்களுக்கு எதிரான போர்களில் உரோமானியர்களுக்குப் பிந்தைய பிரித்தானியர்களின் தலைவராகச் சித்தரிக்கப்படுகிறார். இவர் முதன்முதலில் இரண்டு இடைக்காலத் தொடக்க வரலாற்று ஆதாரங்களான அன்னாலசு கேம்பிரியா, இசுத்தோரியா பிரிட்டோனம் ஆகியவற்றில் தோன்றினார். ஆனால் இவை அவர் வாழ்ந்த 300 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று கருதப்படுகிறது. மேலும் அந்தக் காலத்தைப் படிக்கும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இவரை ஒரு வரலாற்று நபராக கருதவில்லை.[2][3] 'ஒய் கோடோடின்' போன்ற தொடக்ககால வேல்சியக் கவிதைகளிலும் இவரது பெயர் உள்ளது.[4][5][6] இந்த பாத்திரம் வேல்ஸ் புராணத்தின் மூலம் உருவானது. மனித மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட எதிரிகளிடமிருந்து பிரிட்டனைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த போர்வீரனாகவோ அல்லது நாட்டுப்புறக் கதைகளின் மந்திர நபராகவோ தோன்றியது. சில நேரங்களில் புராணங்களில் உள்ள மறுஉலகமான ஆன்னுடன் தொடர்புடையது.[7]

வரலாற்றுச் சிறப்பு

[தொகு]
ஆங்கிலோ-சாக்சன் போரில் படைகளை நடத்திச் செல்லும் ஆர்தர் , 1898

ஆர்தர் மன்னர் பாரம்பரியமாக ஒரு வரலாற்று நபராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவர் ஒரு பண்டைய பிரித்தானியப் போர் தளபதியாகவும், குறைந்தபட்சம் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஒரு மன்னராகவும் இருந்ததாக முதலில் கருதப்பட்டது. இருப்பினும், இவரது பல்வேறு செயல்கள் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. மேலும் சமகால அறிஞர்கள் மற்றும் மதகுருமார்கள் பொதுவாக இவரது தீவிர நீண்ட ஆயுள் மற்றும் எதிர்கால வருகை குறித்த பிரபலமான இடைக்கால நம்பிக்கையை மறுத்தனர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து, ஆர்தரின் வரலாற்றுத் தன்மை குறித்து கல்விசார் விவாதம் நடந்து வருகிறது.[8] ஆர்தரின் கதையின் விவரங்கள் முக்கியமாக வேல்ஸ் புராணங்கள், ஆங்கில நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இலக்கியக் கண்டுபிடிப்புகளால் ஆனவை. மேலும் அந்தக் காலகட்டத்தைப் பற்றி எழுதிய பெரும்பாலான நவீன வரலாற்றாசிரியர்கள் இவர் ஒரு வரலாற்று நபர் என்று நினைக்கவில்லை..[2][9][10]

தொல்லியல் சான்றுகள்

[தொகு]

கடலோர தாழ்நிலப் பகுதிகளிலும், இங்கிலாந்தாக மாறவிருந்த இடத்திலும் கிடைத்த தொல்லியல் சான்றுகள், கி.பி 500 மற்றும் 550 க்கு இடையில் பெரிய பிரித்தானியாவிற்கு ஆரம்பகால ஆங்கிலோ-சாக்சன் இடம்பெயர்வு தலைகீழாக மாற்றப்பட்டதைக் காட்டுகின்றன, இது பிராங்கிஷ் நாளாகமங்களுடன் ஒத்துப்போகிறது.[11] கிளாஸ்டன்பரி துறவிகள் 1180 ஆம் ஆண்டில் ஆர்தரின் கல்லறையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.[12]  

மேற்கோள்கள்

[தொகு]
  1. Neubecker 1998–2002
  2. 2.0 2.1 Tom Shippey, "So Much Smoke", review of Higham 2002, London Review of Books, 40:24:23 (20 December 2018)
  3. Higham 2002, has a summary of the debate on this point.; Davies, John (1993). A history of Wales. Internet Archive. London : Allen Lane the Penguin Press. p. 133. ISBN 978-0-7139-9098-0.
  4. Aneirin (1250). Llyfr Aneirin [Book of Aneirin] (Parchment.) (in வேல்ஷ்). p. 37, line 21. NLW Llyfr Aneirin (Cardiff MS 2.81).
  5. Charles-Edwards 1991, ப. 15; Sims-Williams 1991. Y Gododdin cannot be dated precisely: it describes 6th-century events and contains 9th- or 10th-century spelling, but the surviving copy is 13th-century.
  6. D'Amato, Raffaele; Salimbeti, Andrea (2023). Windrow, Martin; Reynolds, Nick (eds.). Post-Roman Kingdoms: 'Dark Ages' Gaul and Britain, AD 450-800. Illustrated by Andrei Negin. London: Bloomsbury Publishing Plc. p. 6. ISBN 978-1-4728-5091-1. although the earliest surviving manuscript of the poem (Cardiff MS 2.81) is usually dated to the mid-13th century, Y Gododdin mentions 'Arthur' (YG XXXIII, in the archaic version). This source is believed to date from the 590s, being transmitted orally before its transcription perhaps in the 9th–10th century.
  7. See Padel 1994; Sims-Williams 1991; Green 2007b; and Roberts 1991a
  8. Higham 2002
  9. Higham 2002, has a summary of the debate on this point.
  10. Davies, John (1993). A history of Wales. Internet Archive. London : Allen Lane the Penguin Press. p. 133. ISBN 978-0-7139-9098-0.
  11. Davies (1994) pp. 56
  12. Davies, John (1993). A history of Wales. Internet Archive. London : Allen Lane the Penguin Press. p. 133. ISBN 978-0-7139-9098-0.; "Arthur's Tomb". Glastonbury Abbey Archaeology (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-08-08.

பொதுவான ஆதாரங்கள்

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_அரசர்&oldid=4231043" இலிருந்து மீள்விக்கப்பட்டது