உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்ட் புச்வால்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்ட் புச்வால்ட்
பிறப்புஆர்ட் புச்வால்ட்
(1925-10-20)அக்டோபர் 20, 1925
நியூயார்க் நகரம், நியூயார்க்
இறப்புசனவரி 17, 2007(2007-01-17) (அகவை 81)
வாஷிங்டன், டி.சி.
படித்த கல்வி நிறுவனங்கள்தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர்
சமயம்யூத மதம்
பெற்றோர்ஹெலன் மற்றும் ஜோசப் புச்வால்ட்
வாழ்க்கைத்
துணை
ஆன் மக்கேரி

ஆர்ட் புச்வால்ட் (ஆர்த்தர் புச்வால்ட், Arthur Buchwald, அக்டோபர் 20, 1925 - ஜனவரி 17, 2007) மிகவும் பிரபலமான அமெரிக்க நகைச்சுவையாளர்களில் ஒருவர். த வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) பத்திரிகையில் இவருடைய பத்தி பல வருடங்களாக வந்தவொன்று. இந்தப் பத்தி, உலகெங்கிலுமுள்ள பல பத்திரிகைகளில் மறுபிரசுரம் கண்டன. அவ்வாறு வெளியிட்ட நாளிதழ்களில் சென்னையிலிருந்து வெளியாகும் 'த ஹிண்டு'வும் ஒன்று. இவருடைய பத்தி எழுத்துகளில் அரசியல் நையாண்டி மற்றும் கருத்துகள் அதிக இடம் பிடித்தன. சொந்தக் கருத்துகளை அவருடைய பத்திகளில் காண இயலாது. 1982-ஆம் ஆண்டு சிறந்த கருத்துப் பத்திக்கான புலிட்சர் விருது பெற்றார். 1986-ஆம் ஆண்டு American Academy and Institute of Arts and Lettersக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.

இவர் 1950களில் பாரிஸிலிருந்து எழுதிய பத்திகள் மிகவும் முக்கியமானவை. அங்கே, 'த ஹெரால்ட் ட்ரிப்யூன்' பத்திரிகைக்கு பத்திகள் எழுதினார்.

பெப்ரவரி 2006-இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிறுநீரகங்கள் செயலிழந்து வந்த நிலையிலும் டயாலிஸிஸ் செய்ய மறுத்துவிட்டார். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக, இவருடைய உடல்நிலை மோசமடையவில்லை. ஜூன் 2006 இல் மருத்துவமனையை விட்டு வெளியேறியவர், தன்னுடைய சிறுநீரகங்கள் வேலை செய்வதாகக் குறிப்பிட்டவர், மார்த்தா'ஸ் வைன்யாட்டில் (Martha's Vineyard) இருக்கும் சொந்த வீட்டில் எஞ்சிய நாட்களைக் கழிக்க விரும்பினார். அதன்படி ஜூலை 2006 அவருடைய கோடைகால வீட்டிற்குத் திரும்பினார். "அந்த வீட்டிற்குத் திரும்பி வருவேன் என்று நான் நினைக்கவேயில்லை" என்றும் அவர் அச்சமயத்தில் குறிப்பிட்டார். அந்தக் கோடைகால வீட்டிலிருந்த காலத்தில் 'Too Soon to Say Goodbye' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். அப்புத்தகத்தில், மருத்துவமனையில் அவர் இருந்த ஐந்து மாத அனுபவங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள், உற்றார் உறவினர்கள் எழுதிய அஞ்சலிகள் சேர்க்கப்பட்டன.

ஆர்ட் புச்வால்ட் ஜனவரி 17, 2007 அன்று சிறுநீரக கோளாறினால் வாஷிங்டன் டி.சி.யில் மரணமடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ட்_புச்வால்ட்&oldid=3044429" இலிருந்து மீள்விக்கப்பட்டது