ஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்சு இயக்கம்
ஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்சு இயக்கம் (Arts and Crafts movement) என்பது, 1880க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும்,[1] 1920களில் சப்பானிலும், செழித்தோங்கி இருந்த அழகூட்டற்கலை, கவின்கலை ஆகியவை சார்ந்த ஒரு பன்னாட்டு இயக்கம். இது, எளிமையான வடிவங்களைப் பயன்படுத்தி மரபுவழியான கைப்பணிகளுக்கு ஆதரவாக இருந்ததுடன், இடைக்கால, வியன்புனைவு சார்ந்த, நாட்டார் பாணிகளில் அமைந்த அழகூட்டல்களைப் பயன்படுத்தியது. இது சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்களை வலியுறுத்தியதுடன், தொழில்மயமாக்க எதிர்ப்புப் போக்கையும் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.[2][3][4] 1930களில் இது நவீனவியத்தால் மாற்றீடு செய்யப்படும்வரை இவ்வியக்கத்தின் செல்வாக்கு ஐரோப்பா எங்கும் பரவியிருந்தது.[5] எனினும், கைப்பணியாளர்கள், வடிவமைப்பாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரிடையே தொடர்ந்தும் நீண்டகாலம் செல்வாக்குடன் இருந்தது.[6]
இவ்வியக்கத்துக்க அடிப்படையாக அமைந்த கொள்கைகளும், பாணியும் 20 ஆண்டுகளாகவே இங்கிலாந்தில் வளர்ச்சியுற்று வந்தபோதும், 1887ம் ஆண்டிலேயே கலை, கைப்பணிக் கண்காட்சிச் சங்கத்தின் கூட்டம் ஒன்றில், டி. ஜே. கொப்டென்-சாண்டர்சன் என்பவர் முதன் முதலாக இந்தப் பெயரைப் பயன்படுத்தி இவ்வியக்கத்தைக் குறிப்பிட்டார்.[7] கட்டிடக்கலைஞர் அகசுத்தசு பூசின் (Augustus Pugin - 1812–1852), எழுத்தாளரான யோன் ரசுக்கின் (John Ruskin - 1819–1900)), ஓவியர் வில்லியம் மொறிசு (William Morris - 1834–1896) ஆகியோரின் எழுத்துக்களே இவ்வியக்கத்துக்குத் தூண்டுதல்களாக அமைந்தன.[1]
இவ்வியக்கம் தொடங்கியதும், முழுமையாக வளர்ச்சி பெற்றதும் பிரித்தானியத் தீவுகளிலேயே ஆகும்.[5] இது அங்கிருந்து பிரித்தானியப் பேரரசின் பகுதிகளுக்கும், ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும், வட அமெரிக்காவுக்கும் பரவியது. அக்காலத்தில் அழகூட்டற்கலைகள் இருந்த தாழ்ந்த நிலைக்கும், அவை உருவான நிலைமைகளுக்குமான ஒரு எதிர்த் தாக்கமாகவே பெரும்பாலும் இந்த இயக்கம் இருந்தது.[2]
தோற்றமும் செல்வாக்கும்
[தொகு]ஜோன் ரசுக்கினின் பங்களிப்பு
[தொகு]"ஆர்ட்சு அன்டு கிராஃப்ட்சு" இயக்கத்தின் கொள்கையின் ஒரு பகுதி ரசுக்கினின் சமூக விமர்சனத்தில் இருந்து உருவானது. ரசுக்கின், ஒரு நாட்டின் ஒழுக்கம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை அதன் கட்டிடக்கலையின் தரம், பணியின் இயல்பு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தினார். தொழிற்புரட்சியினால் உருவான இயந்திரமய உற்பத்தி, வேலைப் பிரிவு என்பன ஒரு அடிமை முறை என அவர் கருதினார். நலத்துடன் கூடிய ஒழுக்கமுள்ள சமுதாயத்துக்குத் தாம் செய்வதைத் தாமே வடிவமைக்கும் சுதந்திரமான வேலையாட்கள் தேவை என்பது அவரது கருத்தாக இருந்தது. "ஆர்ட்சு அன்டு கிராஃப்ட்சு" இயக்கத்தில் இவரைப் பின்பற்றுபவர்கள், தொழிற்சாலை உற்பத்திகளைவிட கைவினை உற்பத்திகளையே விரும்பியதுடன், மரபுவழியான திறன்கள் இழக்கப்படுவது குறித்துக் கவலையும் கொண்டிருந்தனர். இவர்கள் இயந்திரங்களைக் குறித்தல்லாமல், தொழிற்சாலை முறைமையின் தாக்கங்களைக் குறித்தே கலக்கமுற்றிருந்தனர்.[8] வில்லியம் மொறிசின் கைவினை குறித்த எண்ணம், வேலைப்பிரிவு இல்லாத வேலையே அன்றி, இயந்திரம் இல்லாத வேலை என்பது அல்ல.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Triggs, Oscar Lovell (1902). Chapters in the History of the Arts and Crafts Movement.
- ↑ 2.0 2.1 Brenda M. King, Silk and Empire
- ↑ Moses N. Ikiugu and Elizabeth A. Ciaravino, Psychosocial Conceptual Practice models in Occupational Therapy
- ↑ "Arts and Crafts Style Guide". British Galleries. Victoria and Albert Museum. பார்க்கப்பட்ட நாள் 2007-07-17.
- ↑ 5.0 5.1 Campbell, Gordon (2006). The Grove Encyclopedia of Decorative Arts, Volume 1. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-518948-3.
- ↑ Fiona MacCarthy, Anarchy and Beauty: William Morris and his Legacy 1860-1960, London: National Portrait Gallery, 2014 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 185514 484 2
- ↑ Alan Crawford, C. R. Ashbee: Architect, Designer & Romantic Socialist, Yale University Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300109393
- ↑ Jacqueline Sarsby" Alfred Powell: Idealism and Realism in the Cotswolds", Journal of Design History, Vol. 10, No. 4, pp. 375-397
- ↑ David Pye, The Nature and Art of Workmanship, Cambridge University Press, 1968
உசாத்துணைகள்
[தொகு]- MacCarthy, Fiona (1994). William Morris. Faber and Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-571-17495-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)