ஆர்டெலினிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்டெலினிக் அமிலம்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
4-[(3R,5aS,6R,8aS,9R,10S,12R,12aR)-டெக்கா ஐதரோ-
3,6,9-டிரைமெத்தில்-3,12-எப்பாக்சி-12H-பைரனோ[4,3-j]-1,2-
பென்சோடையாக்சபின்-10-ஐல்]ஆக்சி]மெத்தில்பென்சாயிக் அமிலம்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 120020-26-0 Yes check.svgY
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 180423
ChemSpider 8517407 N
ChEMBL CHEMBL477080 N
வேதியியல் தரவு
வாய்பாடு C23

H30 Br{{{Br}}} O7  

மூலக்கூற்று நிறை 418.48 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C23H30O7/c1-13-4-9-18-14(2)20(26-12-15-5-7-16(8-6-15)19(24)25)27-21-23(18)17(13)10-11-22(3,28-21)29-30-23/h5-8,13-14,17-18,20-21H,4,9-12H2,1-3H3,(H,24,25)/t13-,14-,17+,18+,20+,21-,22-,23-/m1/s1 N
    Key:UVNHKOOJXSALHN-ILQPJIFQSA-N N

ஆர்டெலினிக் அமிலம் (Artelinic acid) என்பது C23H30O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய உப்பு ஆர்டெலினேட்டு எனப்படுகிறது. மலேரியா நோய் சிகிச்சையில் சோதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருந்தாக ஆர்டெலினிக் அமிலம் அல்லது ஆர்டெலினேட்டு உப்பு கருதப்படுகிறது[1]. ஆர்டெலினிக் அமிலம் இயற்கைச் சேர்மமான ஆர்டெமிசினின் சேர்மத்தினுடைய பகுதி செயற்கை வழிப்பெறுதியாகும். தொடர்புடைய பிற வழிபெறுதிகளான ஆர்டெயீத்தர் மற்றும் ஆர்டெமெத்தர் போன்ற சேர்மங்களைக் காட்டிலும்0 குறைவான நரம்புநச்சுத்தன்மை விகித்தத்தை இது பெற்றுள்ளது[2]. ஆனால் ஆர்டெசுனேட்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக நச்சுத்தன்மையை கொண்டிருக்கிறது[3]. நடைமுறையில் ஆர்டெலினிக் அமிலத்தை வழக்கமான சிகிச்சை முறைகளில் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் நடைமுறையில் பயன்படுத்தப்படும் ஆர்டெமிசினின் மருந்துகளைக் காட்டிலும் சிறப்புத்தன்மைகள் ஏதும் அறியப்படவில்லை. மேலும் ஆர்டெலினிக் அமிலத்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "In-vitro tests on Philippine isolates of Plasmodium falciparum against four standard antimalarials and four qinghaosu derivatives.". Bull World Health Organ 72: 729–35. 1994. 
  2. "Behavioural and neural toxicity of the artemisinin antimalarial, arteether, but not artesunate and artelinate, in rats". Pharmacol Biochem Behav 67 (1): 37–44. 2000. doi:10.1016/S0091-3057(00)00309-9. பப்மெட்:11113482. https://archive.org/details/sim_pharmacology-biochemistry-and-behavior_2000-09_67_1/page/37. 
  3. "Toxicity exaluation of artesunate and artelinate in Plasmodium berghei-infected and uninfected rats". Trans R Soc Trop Med Hyg Z 101 (2): 104–12. 2007. doi:10.1016/j.trstmh.2006.04.010. பப்மெட்:16860356. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்டெலினிக்_அமிலம்&oldid=3520560" இருந்து மீள்விக்கப்பட்டது