ஆர்டிமல்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

<[1]

ஆர்டிமல்லோ

ஆர்டிமல்லோ உடல் முழுவதும் ஓட்டுடன் வாழும் ஒரு விலங்கு . உடல் முழுவதும் ஓட்டினுள் அமைந்துள்ளதால் எதிரி விலங்குகளிடமிருந்து தன்னை எளிதாக பாதுகாத்து கொள்கிறது . இவ்விலங்குகள் தென் அமெரிக்காவில் வாழ்கின்றன . வட அமெரிக்காவிலும் சில வகை ஆர்டிமல்லோக்கள் வாழ்கின்றன . உலகில் இருபது வகை ஆர்டிமல்லோ இனங்கள் இருக்கின்றன . இதில் பெரிய ஆர்டிமல்லோக்கள் சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை வளரும். மிக சிறிய ஆர்டிமல்லோக்கள் சுமார் 12 செ .மீட்டர் வரை வளரும். ஆமைகளுக்கு முதுகில் மட்டும் தான் ஓடு இருக்கும் .அனால் ஆர்டிமல்லோவிற்கு கை .கால் ,தலை மார்பு வால் ,என்று எல்ல உறுப்புகளிலும் ஓடு தனித்தனியாக இருக்கும். எதிரிகள் பிடிக்க வரும் போது குழி தோண்டி அதற்குள் நுழைத்துகொள்ளும் .பள்ளம் தோண்ட நேரம் இல்லை என்றால் தன் ஓட்டுக்குள் உடலைச் சுறுக்கிவைத்து பந்து போல் கிடந்து விடும் . ஆர்டிமல்லோக்கள் புழு ,பூச்சிகளிடமிருந்து பயிர்களை காப்பதால் இது மனிதனின் நண்பன் என்று கூறப்படுகிறது.

மேற்கோள்: விலங்குகளைப் பற்றிய வினோத செய்திகள் .-பாபநாசம் குறள் பித்தன்

  1. மேற்கோள்: விலங்குகளைப் பற்றிய வினோத செய்திகள் -பாபநாசம் குறள் பித்தன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்டிமல்லோ&oldid=2377219" இருந்து மீள்விக்கப்பட்டது