ஆர்டினைட்டு
ஆர்டினைட்டு Artinite | |
---|---|
கலிபோரினியாவின் இத்ரியா மாவட்டத்தில் கிடைத்த ஆர்டினைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Mg2(OH)2CO3•3H2O |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை |
படிக இயல்பு | ஊசி படிகங்கள், இழைகள், திராட்சைக் கொத்து பட்டைகள், கோளங்கள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | {100} இல் தெளிவு; {001} இல் நன்று. |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு, பட்டு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.01 - 2.03 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.488 - 1.489 nβ = 1.533 - 1.534 nγ = 1.556 - 1.557 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.068 |
மேற்கோள்கள் | [1][2][3] |
ஆர்டினைட்டு (Artinite) என்பது Mg2(CO3)(OH)2•3H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மென்மையான ஒற்றைச்சரிவச்சு படிகவடிவில் பட்டகம் போன்ற படிகங்களாக இது உருவாகிறது.
பெரும்பாலும் ஆரச்சமச்சீர் வரிசைகளில் அல்லது ஏடுகளாகப் படிந்த நிலையில் இவை காணப்படுகின்றன. மோவின் அளவுகோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 2.5 என்றும் ஒப்படர்த்தி மதிப்பு 2 என்றும் அளவிடப்படுகிறது.
குறைந்த வெப்பநிலை நீர்வெப்ப நரம்புகளிலும், செர்பெண்டைன் வகை தீப்பாறைகளிலும் ஆர்ட்டினைட்டு கனிமம் தோன்றுகிறது. புரூசைட், ஐதரோமாக்னசைட்டு, பைரோவாரைட்டு, கிரிசோடைல், அரகோனைட்டு, கால்சைட்டு, டோலமைட்டு மற்றும் மாக்னசைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து ஆர்டினைட்டு தோன்றுகிறது [1].
முதன்முதலில் 1902 ஆம் ஆண்டில் இத்தாலியின் லோம்பார்டி நிர்வாக மண்டலத்தில் ஆர்டினைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலிய கனிமவியலாளர் எட்டோர் ஆர்டினி (1866-1928) நினைவாக ஆர்டினைட்டு எனக் கனிமத்திற்குப் பெயரிடப்பட்டது [2]
.