உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்க்கியன் பேரூழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்க்கியன் பேரூழி
4000 – 2500 Ma
ஆர்க்கியனின் நிலத்தோற்ற வரைபடம்
காலக்கோடு
முன்னையது[[]]
பின்னையது[[]]
சொற்பிறப்பு
Name formalityFormal
Alternate spelling(s)Archaean, Archæan
ஒத்தசொல்(கள்)Eozoic
John William Dawson, 1865
தகவல்கள்
Celestial bodyEarth
Regional usageGlobal (ICS)
Time scale(s) usedICS Time Scale
வரைவிலக்கணம்
காலவரிசை அலகுபேரூழி
பாறைஅடுக்கியல் அலகுEonothem
Time span formalityFormal
Lower boundary definitionTen oldest U-Pb zircon ages
Lower boundary GSSAAlong the Acasta River, வடமேற்கு நிலப்பகுதிகள், கனடா
65°10′26″N 115°33′14″W / 65.1738°N 115.5538°W / 65.1738; -115.5538
Lower GSSA ratified2023[1]
Upper boundary definitionDefined Chronometrically
Upper GSSA ratified1990[2]
தீடிசு ஏரியில் காணப்படும் ஆர்க்கியன் தொல்லுயிர் எச்சம், மேற்கு ஆத்திரேலியா

ஆர்க்கியன் (Archean அல்லது Archaean அல்லது Archæan) (IPA: /ɑːrˈkən/ ar-KEE-ən, பழைய ஆவணங்களில்ஆர்க்கியோசோயிக் (Archaeozoic) என்று அழைக்கப்படுகிறது, இது வரலாற்றின் நான்கு காலங்களில் இரண்டாவது ஆகும். இதற்கு முன்னர் ஏடியன் பேரூழியும், இக்காலத்தினை அடுத்து, புரோடெரோசோயிக் பேரூழி, பானெரோசோயிக் பேரூழி ஆகியனவும் தொடர்ந்து அமைந்துள்ளன. ஆர்க்கியன் காலம் 4,031 to 2,500 Ma (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) முதல் வரையிலான காலப்பகுதியைக் குறிக்கிறது. மிகப் பழமையான அறியப்பட்ட பனிக்காலம் (Pongola glaciation) என்பது, இக்காலத்தின் நடுப்பகுதியில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆர்க்கியன் காலத்தில் பூமி பெரும்பாலும் ஒரு நீர் உலகம் ஆக இருந்தது. கண்ட மேலோடு இருந்தது. ஆனால் அதன் பெரும்பகுதி, இன்றைய கடல்களை விட ஆழமான பெருங்கடல்க்கு அடியில் இருந்தது. சில அரிதான எச்சப் படிகங்களைத் தவிர (Hadean zircon), இன்றைய பழமையான கண்டப் மேலோடு, ஆர்க்கியன் காலத்தைச் சேர்ந்தது. ஆர்க்கியன் காலத்தின் நிலவியல் விவரங்கள் பெரும்பாலும், அடுத்தடுத்த தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டுள்ளன. புவியின் வளிமண்டலம் இன்றைய வளிமண்டல வேதியியல் கூறுகளிலிருந்து மிகவும் வேறுபட்டு இருந்தது: உயிர் தோன்றுவதற்கு முந்தைய வளிமண்டலம் (prebiotic atmosphere) வளிமண்டல மீத்தேன் நிறைந்த, ஒடுக்கும் வளிமண்டலமாக இருந்தது. மேலும், தனி உயிர்வளிஆக்சிஜன் இல்லாதிருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Global Boundary Stratotype Section and Points". International Commission on Stratigraphy. Retrieved October 23, 2025.
  2. Plumb, Kenneth A. (June 1991). "New Precambrian time scale". Episodes 14 (2): 139–140. doi:10.18814/epiiugs/1991/v14i2/005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797. இணையக் கணினி நூலக மையம்:4130038.  open access publication - free to read

இவற்றையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கியன்_பேரூழி&oldid=4440987" இலிருந்து மீள்விக்கப்பட்டது