உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்கண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்கண்டி ஆடையில் சிறுமி. சுமார் 1900. வலென்சியன் மியூசியம் ஆஃப் எத்னாலஜி சேகரிப்பு.

ஆர்கண்டி (Organdy, also spelled Organdie) [1] என்பது ஒரு வகையான மெல்லிய இலகுரக பருத்தி துணி ஆகும். [2] [3] மிக இலேசாகவும், கம்பி போன்ற விரைப்பான தன்மையும், ஒளி புகவிடும் திறனும் உள்ள துணியான இது மிக மெல்லியது.

பயன்[தொகு]

ஆர்கண்டி துணியானது திருமண ஆடைகள், பெண்களுக்கான விழா ஆடைகள், இரவிக்கை போன்றவை தைக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆர்கண்டி திரைத்துணி, ஆடைகளின் உள்ளடுக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தது. [1] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இளம் பெண்கள் ஆர்கண்டி ஆடைகளை அணிந்தனர். [4] மேனாடுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம்பில் இது வைத்துத் தைக்கப்பட்டது. இன்று, மார்க் ஜேக்கப்ஸ் போன்ற வடிவமைப்பாளர்களின் உயர் புதுப்பாங்கு சேகரிப்புகளில் ஆர்கன்டி பெரும்பாலும் காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Humphries, Mary (1996). Fabric reference. Internet Archive. Upper Saddle River, N.J. : Prentice Hall. pp. 169, 5, 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-349671-0.
  2. Elsasser, Virginia Hencken (2005). Textiles : concepts and principles. Internet Archive. New York, NY : Fairchild Publications. pp. 126, 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56367-300-9.
  3. Le Van, Marthe (2009). Stitched Jewels: Jewelry That's Sewn, Stuffed, Gathered & Frayed, p. 10. Sterling Publishing Co., Inc.
  4. Dolan, Maryanne (1987). Vintage clothing, 1880-1960 : identification & value guide. Internet Archive. Florence, Ala. : Books Americana. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89689-063-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கண்டி&oldid=3678429" இலிருந்து மீள்விக்கப்பட்டது