உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரோசிடைபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரோசிடைபைட்டு
Aurostibite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுAuSb2
இனங்காணல்
மோலார் நிறை440.47 கி/மோல்
நிறம்வெண்மையும் சாம்பல் நிறமும் கொண்ட போர்னைட்டு கனிமம் போன்ற மங்கிய நிறம்
படிக அமைப்புIsometric
பிளப்புதெளிவில்லாதது
விகுவுத் தன்மைநொறுங்கத்தக்கது
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி9.98
மேற்கோள்கள்[1][2][3]

ஆரோசிடைபைட்டு (Aurostibite) என்பது பைரைட் கனிமக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஓர் சமச்சீர் அளவுடைய தங்க ஆண்டிமோனைடு கனிமமாகும். 1952 ஆம் ஆண்டில் நீர்வெப்ப தங்க-படிகக்கல் இழைகளாக ஆரோசிடைபைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கந்தகக்-குறைபாடுள்ள சூழல்களில் மற்ற ஆண்டிமோனிய கனிமங்கள் காணப்பட்டன. கனடாவின் வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆன யெலோனைஃப் நகரம் மற்றும் கனடாவின் வடகிழக்குப் ஒண்டாரியோ பகுதியிலுள்ள திமிசுகாமிங் மாவட்டத்திலும் ஆரோசிடைபைட்டு கிடைக்கிறது. ஆண்டிமோனைடுகள் அரிதான வகை கனிமங்களாகக் கருதப்பட்டு அவற்றை கனிமவியலாளர்கள் சல்பைடு தாதுக்கள் என்று வகைப்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோசிடைபைட்டு&oldid=4092019" இலிருந்து மீள்விக்கப்பட்டது