ஆரையூர் அருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூ. அருளம்பலம்
பிறப்புமூத்ததம்பி அருளம்பலம்
செப்டம்பர் 19, 1949 (1949-09-19) (அகவை 74)
ஆரையம்பதி, மட்டக்களப்பு, இலங்கை
இருப்பிடம்ஆரையம்பதி
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்ஆரையூர் அருள்
கல்விமட்டக்களப்பு சிவாநந்தா தேசியப் பாடசாலை
பணிஆசிரியர், பாடசாலை அதிபர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், கலைஞர்
சமயம்சைவம்

மூ. அருளம்பலம் (பிறப்பு: செப்ரெம்பர் 19, 1949) என்பவர் ஆரையூர் அருள்[1] என்ற பெயரில் எழுதி வரும் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளரும், கலைஞரும் ஆவார். 1960 முதல் கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற பல துறைகளில் இவரது ஆக்கங்களும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அருளம்பலம் தனது ஆரம்பக் கல்வியை ஆரைப்பற்றை இ.கி.மி.த.க.பாடசாலையிலும், உயர்கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா தேசியப் பாடசாலையிலும் கற்றார். ஆசிரியராகப் பயிற்சி பெற்று முதலாம் தர இலங்கை அதிபராகப் பணியாற்றினார்.[2] இவரது எழுத்துகள் இலங்கையின் பிரபலமான பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகின. பல ஒலிப்பேழைகளுக்கு வரியெழுதி வெளியிட்டார்.[2] பக்தி இலக்கிய வகையைச் சேர்ந்த இறையின்பப் பாவாரம் என்ற 742 பக்கங்களைக் கொண்ட பெருங் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டார். மொத்தம் 3010 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.[3][4]

எழுதிய நூல்கள்[தொகு]

 • பேச்சியம்பாள் பாடல்கள் (2001)
 • மட்/புதுக்குடியிருப்பு கற்பரசி கண்ணகி அம்பாள் பாடல்கள் (2002)
 • புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல்கள் (2002)
 • கல்லடி - உப்போடை - நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்பாள் பாடல்கள் (2010)
 • ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் சிதானந்த தபோவனம் ஸ்தாபகர் ஓங்காரானந்த சரஸ்வதி சரிதம் (2010)
 • பேச்சியம்பாளின் அவதாரமும் ஆலயமும் (2012)
 • “கிராமத்து உள்ளங்கள்” நாட்டார் இலக்கியம் (2013)[5]
 • “இறையின்பப் பாவாரம்” (பக்தியிலக்கியம், 2016)[3]

விருதுகள்[தொகு]

 • ‘கூத்துக்கலைஞன்‘ (மண்முனைப் பற்று சாகித்திய விழா, 1997)[2]
 • ‘நாட்டுக்கூத்துக் கலைஞன்‘ (ஜோசப் பரராஜசிங்கம் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் வழங்கியது, 2002).[2]
 • ‘கீர்த்தி சிறி‘ தேசிய விருது (முன்னாள் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி வழங்கியது, 2009)[2]
 • ‘கலைஞானி‘ (ஆரையம்பதி மகாவித்தியாலய நட்புறவுக் குழு வழங்கியது, 2009)[2]
 • ‘முதலமைச்சர் விருது‘ (கிழக்கு மாகாணசபை கிராமிய கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக வழங்கியது, 2010)[6]
 • ‘கலாபூசணம்‘ தேசிய விருது இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் வழங்கியது, 2010)[2]
 • ‘இறைஞான தேசிகர்‘ (இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி கபாலீசுவரானந்தா வழங்கியது, 2011)[2]
 • ‘சாதனையாளர்‘ விருது (ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பு வழங்கியது, 2012)[2]

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
ஆரையூர் அருள் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரையூர்_அருள்&oldid=3644391" இருந்து மீள்விக்கப்பட்டது