ஆருஷி நிஷாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆருஷி நிஷாங்
பிறப்பு17 செப்டம்பர் 1986 (1986-09-17) (அகவை 37)
கோட்வார், உத்ராகண்ட், இந்தியா
இருப்பிடம்டேராடூண், துபாய்
தேசியம்இந்தியன்
பணிபாரம்பரிய நடனக்கலைஞர், தொழிலதிபர், படத்தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000 – தற்போது

ஆருஷி நிஷாங் (Arushi Nishank பிறப்பு: 17 செப்டம்பர் 1986), பெரும்பாலும் ஆருஷி போக்ரியால் என்று அழைக்கப்படும் இவர் இந்தியப் பாரம்பரிய நடனக்கலைஞரும், தொழிலதிபரும், படத்தயாரிப்பாளரும் ஆவார்.[1] இவர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் மற்றும் டாக்டர் பூர்ணிமா பாண்டே ஆகியோரின் சீடர். பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய மன்றத்தின் அங்கீகரிக்கப்பட்ட கதக் நடனக்கலைஞரான இவர் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞராகவும் திகழ்கிறார்.[2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

உத்ராகண்ட் மாநிலத்தின் கோட்வார் என்ற இடத்தில் பிறந்த இவர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பன்சத்தலி வித்யாபீடத்தில் அரசியல் அறிவியல் மற்றும் தத்துவவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கலத்தில் முதுகலை வணிக மேலாண்மை மற்றும் சர்வதேச கேம்பிரிட்ஜ் மேலாண்மையியல் முதுகலைப்பட்டயப் படிப்பைத் தொடர்ந்தார். கதக் நடன வடிவத்தின் “நிஷ்னத்” என்ற எட்டு வருடச் சான்றிதழ் படிப்பினை முடித்துள்ளார். தற்போது இந்தியாவில் மனிதவளம் தொடர்பான முனைவா் படிப்பினை தொடர்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூணில் உள்ள தனக்குச் சொந்த இமயமலை ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவராகத் தற்போது உள்ளார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

லண்டனில் நடத்தப்பட்ட சிறப்பு யோகா மற்றும் கதக் இசைநிகழ்ச்சி போன்ற பல புகழ்பெற்ற சர்வதேச கதக் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.[4][5] இந்தியாவில் லெக்சர் ரெசிடல் என்ற நிகழ்ச்சியும், ஆஸ்திரியாவில்கிரேஸ்” என நிகழ்ச்சியும், ஜெர்மனியில்பெங்காலி நாட்ச்” என்ற இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், இந்தியாவின் டொராண்டோ திருவிழா என்ற பெயரில் கனடாவிலும், அதே நாட்டில் நடைபெற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் “தாரணா நாட்டிய விழா” என்ற நடன இசை நிகழ்ச்சியும், துபாயில் இந்திரதனுஷ்இந்தியாவின் வண்ணம்” என்ற நிகழ்ச்சியிலும்,புது தில்லியில் அமைந்துள்ள கலாச்சார உறவுகளுக்கான இந்திய மன்றத்தில் ஹாரிசன் சீரிஸ் என்ற நிகழ்விலும்,தூர்தர்ஷனின் நேரடி நிகழ்ச்சியிலும் ஆக்ராவில்தாஜ் மகோத்சவ்” நிகழ்ச்சியிலும் ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவிலும் [6], கங்கை தேவி பூமிக்கு வரும் கதையான “கங்கா அவதாரம்” என்ற நிகழ்ச்சியையும் இவர் நடத்தியுள்ளார்.[7] ஸ்பிக் மாக்கேயுடன் இணைந்து இந்தியா முழுவதிலும் கதக் பாரம்பரிய நடனம் கற்பித்தலில் ஈடுபட்டார்.கலாச்சார உறவுகளுக்கான இந்திய மன்றத்தின் ஏற்பாட்டில் பல கதக் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[8] டைம்ஸ் ஆப் இந்தியா, நியூஸ் 24, தூர்தர்ஷன் போன்ற பல ஊடகங்களால் பேட்டி காணப்பட்டுள்ளார். பதஞ்சலி யோகபீடத்தின் பல தயாரிப்புகளின் தொலைக்காட்சி விளம்பரங்களில் இவர் தோன்றி நடித்துள்ளார். இவருடைய முதல் பதஞ்சலி விளம்பரம் 2012ஆம் ஆண்டு ஆஸ்தா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.[9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆருஷி அபிநவ் பண்ட் என்பவரை திருமணம் செய்துள்ளார். குசும் கண்டா போக்ரியால் மற்றும் தற்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரும் உத்தராகண்டத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான ரமேசு போக்கிரியால் நிஷாங் தம்பதியரின் மூத்த மகளாவார்.

தயாரிப்பாளர் மற்றும் நடன அமைப்பாளர்[தொகு]

ரிஷிகேஷில் கங்கை நதியின் மேல் அமைக்கப்பட்ட மேடையில் 60 கலைஞர்களுடன் ஆருஷி நிஷாங் கங்கை மாதா பூமிக்கு வரும் நிகழ்வை “கங்கை அவதாரம்” என்ற பெயரில் வண்ணமயமான கதக் பாலே பாணியில் வடிவமைந்து ஆடினார்.நல்ல வரவேற்பை பெற்ற இந்த நடன நிகழ்விற்கு பிறகு லக்னோவில் உள்ள ராஷ்ட்ரிய கதக் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று அங்கு இந்த நிகழ்வை அரங்கேற்றினார். முக்கியப் பிரமுகர்களின் பெரும் வரவேற்ப்பைப் பெற்றதால் வட இந்தியாவில் இவரது நடனம் வெற்றிகரமாக அமைந்தது. பின்னர் கலாச்சார தொடர்புகளுக்கான இந்திய மன்றத்துடன் சேர்ந்து கங்கை அவதார நடனம் பல மேடைகளில் ஆடப்பட்டது.

பெற்ற விருதுகள்[தொகு]

  • தேசிய இளைஞர் சின்னம் விருது, 2015
  • கர்வால் சிறந்த சாதனைக்குப் பிந்தைய விருது, 2016
  • உத்தரகண்டின் பெருமை விருது, 2017 [10]
  • உத்தரகண்ட் கவுரவ் சம்மன் விருது, 2018 [11][12]
  • சிறந்த என்.ஆர்.ஐ அடையாள விருது, துபாய், 2018 [13]
  • 'சக்தி பெண்' விருது ஃபோர்ப்ஸ் மத்திய கிழக்கு, 2018 [14][15]

மேலும் காண்க[தொகு]

  • கதக்
  • கதக் நடனக்கலைஞர்களின் பட்டியல் [16]

மேற்கோள்கள[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 21 ஏப்பிரல் 2015 at the வந்தவழி இயந்திரம்
  2. [2]
  3. [3]
  4. "Music: Kathak and Yoga for nourishment, balance, and transformation". Nehru centre. 1 May 2014. Archived from the original on 28 March 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  5. "Narendra Modi is India's new PM" (PDF). Hcilondon.in. Archived from the original (PDF) on 28 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "International Yoga Festival" (PDF). Internationalyogafestival.com. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "The Dance of Mother Ganga: Pujya Swamiji and Dignitaries, Including Shri Anna Hazare, come together to enjoy an unforgettable performance". Gangaaction.org. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  8. "A Historic Moment" (PDF). Parmarth.org\accessdate=2017-07-07.
  9. "Patanjali Product Ad". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  10. "Himani Shivpuri, Dobhal get Pride of Uttarakhand award". Tribuneindia.com. 1 December 2016. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  11. [4]
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
  14. [5]
  15. [6]
  16. https://en.wikipedia.org/wiki/List_of_Indian_women_in_dance
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆருஷி_நிஷாங்&oldid=3927513" இலிருந்து மீள்விக்கப்பட்டது