ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதி சோழன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பி. கே. ராஜா சாண்டோ
தயாரிப்புகந்தன் அன் கம்பெனி
மூலக்கதைமனுநீதிச் சோழன்[1] வரலாறு
இசைஸ்ரீநிவாச ராவ் ஷிண்டே
நடிப்புபி. பி. ரங்காச்சாரி
எம். ஆர். சந்தானலட்சுமி
எஸ். பாலச்சந்தர்
எஸ். வரலட்சுமி
ஏ. ஆர். சகுந்தலா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஈ. ஆர். கூப்பர்
படத்தொகுப்புபஞ்சாபி
கலையகம்கந்தன் ஸ்டூடியோ (கோவை)
வெளியீடு1942
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆராய்ச்சி மணி (ஒலிப்பு) அல்லது மனுநீதி சோழன் 1942 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. பி. ரங்காச்சாரி, எம். ஆர். சந்தானலட்சுமி, எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்..[2]

திரைக்கதைச் சுருக்கம்[தொகு]

திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மனுநீதிச் சோழன் என்ற மன்னன் நீதி வழுவாமைக்குப் புகழ் பெற்றவன் என பழைய தமிழ் நூல்களில் தகவல் காணப்படுகிறது. ஒரு பசுக் கன்றின் மீது தேரேற்றி அக்கன்றைக் கொன்றான் என்பதற்காகத் தன் மகன் மீது தேரேற்றி அவனைக் கொன்றான் எனவும் பின்னர் கடவுள் தோன்றி அவனது மகனையும், கன்றையும் மீண்டும் உயிர் பெறச் செய்தார் எனவும் அக்கதையில் கூறப்பட்டுள்ளது.[1]
ஆயினும் இந்த திரைப்படத்தில் அந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. அரசகுமாரன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு பெண்ணைக் கண்டு அவள் மீது காதல் வயப் படுகிறான். அப்பெண்ணும் அவனை விரும்புகிறாள். அந்தப்பெண் ஒரு அமைச்சரின் மகள். இவர்கள் காதலை அந்த அமைச்சர் விரும்பவில்லை. அரசன் அரசகுமாரனுக்கு முடிசூட்டுகிறார். அரசகுமாரன் அமைச்சரின் மகளை எவ்வாறு திருமணம் செய்கிறான் என்பதே மீதிக் கதையாகும்.[2]

நடிப்பு[தொகு]

நடிகர்கள்[தொகு]

ஆராய்ச்சி மணி நடிகர்கள்[3]
நடிகர் பாத்திரம்
பி. பி. ரங்காச்சாரியார் மனுச்சோழன்
எஸ். பாலச்சந்திரன் விடங்கன்
மாஸ்டர் ராதா பாலவிடங்கன்
சி. பி. விசுவநாதன் முதல் அமைச்சர்
பி. பி. ராமலிங்கம் இரண்டாம் அமைச்சர்
டி. எஸ். பொன்னுசாமி பிள்ளை இராசகுரு
எம். ஆர். சுவாமிநாதன் விதூசகன்
டி. ஆர். லட்சுமிநாராயணன் மனோகரன்
எஸ். கோசல்ராம் கடம்பன்
ஆர். ஜி. நடராஜசுந்தரம் சாது
என். எஸ். கிருஷ்ணன் சடையன்

நடிகைகள்[தொகு]

ஆராய்ச்சி மணி நடிகைகள்[3]
நடிகை பாத்திரம்
எம். ஆர். சந்தானலட்சுமி திருபுவனை
எஸ். வரலட்சுமி கலாவல்லி
ஏ. ஆர். சகுந்தலா லலிதா
பி. எஸ். சந்திரா நீலா
எம். எஸ். தனலட்சுமி காஞ்சனா
ஆர். ஏ. லட்சுமிராணி மல்லிகா
டி. ஏ. மதுரம் மருதாயி

இவர்களுடன் கலாமண்டல மாதவன், தங்கமணி, சித்ரலேகா நடனக் குழுவினரும் நடித்திருந்தனர்.[3]

தயாரிப்புக் குழு[தொகு]

ஆராய்ச்சி மணி தயாரிப்புக் குழு[3]
பணி பெயர்
தயாரிப்பு கந்தன் & கம்பனி
கதை கவி குஞ்சரம்
இயக்கம் பி. கே. ராஜா சாண்டோ
ரகுபீர் எஸ். ரம்யே
உதவி இயக்கம் வீ. ஏ. கோபாலன்
இசை ஸ்ரீனிவாசராவ் சிந்தே
பாடல் வரிகள் கம்பதாசன்
ஒளிப்பதிவு ஈ. ஆர். கூப்பர்
ஒலிப்பதிவு எம். டி. ராஜாராம்
தொகுப்பு எஸ். பஞ்சாபி
ஆய்வகப் பொறுப்பு ஆர். கிருஷ்ணன்
கலையகம் கந்தன் ஸ்டூடியோ, கோயமுத்தூர்

தயாரிப்பு விபரம்[தொகு]

கோவையில் இயங்கி வந்த கந்தன் கம்பெனி நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்த கந்தன் கலையகத்தில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அவர்களது புகழ் பெற்ற தயாரிப்புகளில் இத்திரைப்படமும் ஒன்றாகும். தற்போது இந்த நிறுவனமோ அல்லது கலையகமோ இல்லை.[2]

பாடல்கள்[தொகு]

இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஸ்ரீநிவாசராவ் சிந்தே. பாடல்களை இயற்றியவர் கம்பதாசன். பாடல்கள் அனைத்தும் கருநாடக இசை இராகங்களில் அமைக்கப்பட்டிருந்தன.[2][3]

ஆராய்ச்சிமணி பாடல்கள்[3]
எண். பாடல் பாடியோர் இராகம்-தாளம்
1. பொங்கல் புதுநாளிதே! கோபூஜை கொண்டாடுவோம் குடியானவர்கள் மிச்ரபியாக்/மாஞ்சி, ஆதி/ஏகம்
2. ஆங்காரமான ஓர் பாழும் பேய் பிடித்துனது பி. பி. ரங்காச்சாரியார் அரிகாம்போதி
3. நாதன் அருள் மறந்து ஆர். ஜி. நடராஜசுந்தரம் கரகரப்பிரியா
4. ஜெகன் மாதா ஜீவ தேவதா எம். ஆர். சந்தானலட்சுமி தேஸ்யதோடி, சதுச்ரதிருபுடை
5. என்ன மாதவம் செய்தோமோ இந்நாள் பி. பி. ரங்காச்சாரியார் கௌரிமனோகரி, சதுச்ரதிருபுடை
6. அன்பின் நாடகம் ஆகா! பி. பி. ரங்காச்சாரியார், எம். ஆர். சந்தானலட்சுமி மாண்டு பியாக், சதுச்ரலகு
7. கோட்டைதனை பிடிப்பேன் மாஸ்டர் ராதா மோகனம், சதுச்ரலகு
8. என் பாலா, எழில்மிகு குணசீலா எம். ஆர். சந்தானலட்சுமி தேஸ்யகல்யான், சதுச்ரலகு
9. ஆகாயம் தனி முகில் ஓடுதடா ஆசிரம மாணவர்கள் ராகமாலிகை, ஆதி/ஏகம்
10. கலைவாணி உனது கழல் துணை அம்பா எஸ். பாலச்சந்தர் சரசுவதி, ஆதி
11. இன்பமன்றோ ஏழை வாழ்வில் டி. எஸ். பொன்னுசாமி பிள்ளை காபி/அமெக்தா, சதுச்ரலகு
12. இரவிகுல மன்னர் பெருமை தன்னை சொல்லக் கேள் பி. பி. ரங்காச்சாரியார் ராகமாலிகை, மிச்ரலகு
13. வருவீர் வருவீரே விரைவாய் சகிமாரே எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா மாண்டுமிச்ரம்
14. ஒரு மொழி சொல்லாயோ? வெண்நிலவே நீ எஸ். வரலட்சுமி மிச்ரகாபி, சதுச்ரலகு
15. சுந்தர மோகினியை கண்டது என் கண்கள் எஸ். பாலச்சந்தர் அமீர்கல்யாணி மிச்ரம், ஏகம்
16. நேரமிதே நல்ல நேரமே எஸ். வரலட்சுமி கானடா, சதுச்ரதிருபுடை
17. மோகனாங்கனே அனுராக ரமணியே எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி திலக் காம்போதி, ஆதி
18. கட்டாணி முத்தே கரும்பே வாடி எஸ். கோசல்ராம், ஏ. ஆர். சகுந்தலா மிச்ரம் பீலு, ஏகம்
19. ஆவதும் அழிவதும் அவன் செயல் ஆர். ஜி. நடராஜசுந்தரம் காலிங்டாமிச்ரம், ஆதி
20. காதலது போனால் சாதலாகும் ஆர். ஜி. நடராஜசுந்தரம் பாகேசுவரி/பிம்பிளாசு, பீர்வலகு
எப்போதுஞ்சரிதான் முப்போகம் வெளையும் டி. ஏ. மதுரம்
உறுமிமேளம் கேட்டுக்கோடி என். எஸ். கிருஷ்ணன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Lore of Manu Needhi Cholan". தி இந்து. 8 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 "Araichimani or Manuneethi Chozhan (1942)". தி இந்து. 1 மார்ச்சு 2014. Archived from the original on 2016-10-25. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதிச் சோழன் பாட்டுப்புத்தகம். மாணிக்கம் பிரஸ், கோயம்புத்தூர். 1942.