ஆராய்ச்சி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோசிமா ஆராய்ச்சி நிலையம் குரோசிமா,ஒக்கினாவா.

ஆராய்ச்சி நிலையம் (Research Station) அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்துவதற்காகக் கட்டப்படும் ஒரு நிலையமாகும். உலகத்தின் தொலைவிடப் பகுதிகள், பெருங்கடல்கள், அனைத்துலக விண்வெளி நிலையம் போன்ற புறவெளி உள்ளிட்ட இடங்களிலும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

வகைகள்[தொகு]

வடகிழக்கு அறிவியல் நிலையம்[1], மெக்கில் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையம்[2], இமாத்ரி நிலையம் [3] போன்ற சில ஆய்வு நிலையங்கள் ஆர்க்டிக் பகுதிகளிலில் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்க்டிக் பெருங்கடலின் உயர் அகலாங்குகளில் உள்ள பனிக்கட்டியின் மீது சில ஆராய்ச்சி நிலையங்கள் ஆளுள்ள நகரும் பனிக்கட்டி நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அண்டார்டிக்கா கண்டத்தில் பல நாடுகளும் தங்களுடைய ஆராய்ச்சி நிலையங்களை நிறுவியுள்ளன. ஆலி மற்றும் திரோல் என்பவை சில உதாரணங்களாகும்[4].

நிலநடுவரை அமேசானில் அமைந்துள்ள திபுட்னி பல்லினப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், சவானாவில் அமைந்துள்ள கோமொய் தேசியப் பூங்கா ஆராய்ச்சி நிலையம், தான்சானியாவில் அமைந்திருக்கும் கோம்பே ஆராய்ச்சி நிலையம் போன்றவையும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளும் பலவகையான ஆராய்ச்சி நிலையங்களாகும். கோம்பே நிலையத்தில் சிம்பான்சி குரங்குகள் தொடர்பான ஆய்வுகளை யேன் குட்டால் மேற்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BBC news report
  2. McGill Arctic Research Station|McGill Arctic Research Station (M.A.R.S.). Dale T. Anderson, Centre for the study of life in the universe. Retrieved April 11, 2015
  3. Stensdal, Iselin (2013). "Asian Arctic Research 2005-2012:" (PDF). Fridtjof Nansen Institute. Archived from the original (PDF) on மே 3, 2014. பார்க்கப்பட்ட நாள் May 2, 2014.
  4. "North Pole drifting stations (1930s-1980s)". Woods Hole Oceanographic Institution. பார்க்கப்பட்ட நாள் April 30, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராய்ச்சி_நிலையம்&oldid=3542932" இலிருந்து மீள்விக்கப்பட்டது