ஆராய்ச்சியாளர் அடையாளங்காட்டி
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
---|---|
உரிமையாளர் | கிளாரிவேட் அனாலிடிக்ஸ் |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
நிரலாக்க மொழி | ஆங்கிலம் |
வெளியீடு | ஜனவரி 2008 |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | publons |
ஆராய்ச்சியாளர் அடையாளங்காட்டி (ResearcherID) என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களை அடையாளம் காணும் ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறையானது சனவரி 2008-ல் தாம்சன் ராய்ட்டர்சால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தனித்துவமான அடையாளங்காட்டி ஆராய்ச்சியாளர்களை அடையாளம் காணவும் அவரின் ஆய்வுக் கட்டுரைகளின் சரியான பண்புக்கூறுகளின் சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் கல்வி இலக்கிய ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களின் பெயர், குடும்பப்பெயர் மற்றும் முதலெழுத்துக்களை மேற்கோள் காட்டுவது பொதுவானதாக இருப்பினும், சில நேரங்களில், ஒரே பெயரில், அதே முதலெழுத்துக்களுடன், அல்லது எழுத்துப்பிழையுடன் பெயர்கள் உள்ளன. இதனால் ஆய்வாளர் ஒருவரே பல பெயர்களிலும், சில பகுதிகளில் ஒரே பெயரில் பல ஆய்வாளர்களும் உள்ளனர்.
இத்தகையச் சூழலில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வெளியிடப்பட்ட படைப்புகளைக் கோர ஆராய்ச்சியாளர் அடையாள எண்ணினைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்கள் தங்களின் படைப்புகளுடன் அவர்களின் தனித்துவமான மற்றும் தொடர்ச்சியான ஆராய்ச்சியாளர் அடையாள எண்ணை இணைக்கலாம். இந்த வழியில், அவர்கள் தங்கள் வெளியீட்டுப் பட்டியலைப் புதுப்பித்து இணையவழியில் வைத்திருக்க முடியும்.
எண்ணிம ஆவணச் சுட்டி மற்றும் ஆராய்ச்சியாளர் அடையாளங்காட்டியின் ஒருங்கிணைந்த பயன்பாடு ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளின் தனித்துவமான தொடர்பை அனுமதிக்கிறது. பதிவுசெய்யப்பட்ட சோதனைகளுடன் ஆராய்ச்சியாளர்களை இணைக்க அல்லது ஒரே ஆராய்ச்சித் துறையில் சக மற்றும் ஒத்துழைப்பார்களை அடையாளம் காண இது பயன்படுத்தப்படலாம்.[1]
ஏப்ரல் 2019-ல், ஆராய்ச்சியாளர் அடையாளங்காட்டி கிளாரிவேட் அனலிட்டிக்சசின் சொந்தமான தளமான பப்ளோன்சுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இங்கு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வெளியீடுகள், சகமதிப்பாய்வு செயல்பாடு மற்றும் ஆராய்ச்சி ஏட்டின் தொகுப்புப் பணிகளைக் கண்காணிக்க முடியும். இப்போது பப்ளோன்னில் இணைவு பெற்ற ஆராய்ச்சியாளர் அடையாளங்காட்டியுடன் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சி வெளியீடு மற்றும் பங்களிப்புகளைப் பற்றிய விரிவான பார்வையை ஒரே இடத்தில் வைத்திருக்க முடியும். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகளை (கணினி அறிவியல்) சில துறைகளில் (சமூக அறிவியலில் மனிதநேயம் துறைகள்) ஆய்வு வெளியீட்டுக் களமாக உள்ள புத்தகங்கள் புத்தக அத்தியாயங்களையும் வெளியிடும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.
ஆராய்ச்சியாளர் அடையாளங்காட்டி மற்றும் பப்லோன்சு அறிவியல் வலை மற்றும் ஆர்சிட் தரவைப்பகத்துடன் இணைக்கப்பட்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.[2]
ஆராய்ச்சியாளர் அடையாளங்காட்டியானது வணிக மற்றும் தனியுரிமம் சார்ந்தது என்று விமர்சிக்கப்பட்டது.[3] ஆனால் "ஆராய்ச்சியாளர்களைத் தவறாக அடையாளம் காணப்படுவதற்கான பொதுவான சிக்கலை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சி" என்றும் பாராட்டப்படுகிறது.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Enserink, Martin (27 March 2009). "SCIENTIFIC PUBLISHING: Are You Ready to Become a Number?". Science 323 (5922): 1662–1664. doi:10.1126/science.323.5922.1662. பப்மெட்:19325094. Bibcode: 2009Sci...323.1662E.
- ↑ "RID - ORCID Integration - IP & Science - Thomson Reuters". 12 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Wolinsky, Howard (2008). "What's in a name?". EMBO Reports 9 (12): 1171–1174. doi:10.1038/embor.2008.217. பப்மெட்:19047988.
- ↑ Cals, Jochen WL; Daniel Kotz (28 June 2008). "Researcher identification: the right needle in the haystack". The Lancet 371 (9631): 2152–2153. doi:10.1016/S0140-6736(08)60931-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:18586158.