உள்ளடக்கத்துக்குச் செல்

ஆராதனா மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆராதனா மிசுரா
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்பிரமோத் திவாரி
தொகுதிஇராம்பூர் காசு
தலைவர்-இந்திய தேசிய காங்கிரசு, உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2019
முன்னையவர்அஜய் குமார் லாலு
பகுதி பிரமோக்
பதவியில்
2001–2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1974 (1974-04-20) (அகவை 51)
பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அம்பிகா மிசுரா
பிள்ளைகள்இராக்கே மிசுரா, நந்தியா மிசுரா
பெற்றோர்பிரமோத் திவாரி
வாழிடம்இலக்னோ
கல்விஇளங்கலை வணிகவியல்
முதுகலை வணிக மேலாண்மை
முன்னாள் மாணவர்அலகாபாத் பல்கலைக்கழகம்
இணையத்தளம்www.aradhanamisra.com

ஆராதனா மிசுரா (Aradhana Misra)(பிறப்பு 20 ஏப்ரல் 1974), என்பவர் மோனா மிசுரா என்றும் அழைக்கப்படுபவர், இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசத்தின் 18ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கர் மாவட்டத்தின் ராம்பூர் காசு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2011 முதல் 2016 வரை இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர்.[1] இவர் மூத்த காங்கிரசு தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரமோத் திவாரியின் மகள் ஆவார்.[2]

கல்வியும் பின்னணியும்

[தொகு]

1997-ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஆராதனா, வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதன் பின்னர் தில்லியில் உள்ள மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைகளில் முதுகலைப் பட்டம் பயின்றார். ஆராதனா மிசுரா என்ற மோனா அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரமோத் திவாரி இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் ஆவார். இவர் பிரதாப்கரில் உள்ள ராம்பூர் காசு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஆராதனா மிசுரா உத்தரப் பிரதேசக் காங்கிரசு கட்சியுடன் தொடர்புடையவர். 2000 முதல் உறுப்பினராக உள்ளார். இவர் முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்திலிருந்து பிளாக் பிரமுக்காக (தலைமை) தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[3] இவர் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள உத்தரப் பிரதேச மாநில கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக உள்ளார். 2012 உத்தரப் பிரதேசத் தேர்தலில் ஊடக பிரச்சாரக் குழுவில் தீவிர உறுப்பினராக இருந்த இவர், இந்திய காங்கிரசு கட்சிக்கும் இராகுல் காந்திக்கும் ஊடக மூலோபாயத்தை வகுத்திருந்தார்.[4]

2022 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆராதனா மிசுரா தனது நெருங்கிய பாஜக போட்டியாளரை பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள இராம்பூர் காசு தொகுதியிலிருந்து 14,741 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது சட்டமன்ற உறுப்பினராக இவர் பெற்ற மூன்றாவது வெற்றி ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Politicians, bureaucrats at this Lucknow do". The Times of India. 19 Apr 2011. Archived from the original on 2 February 2014.
  2. 2.0 2.1 "SP support to Cong’s Pramod Tiwari for RS". The Times of India. 11 December 2013 இம் மூலத்தில் இருந்து 3 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140203062227/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-11/india/45077529_1_rampur-khas-up-congress-10-rs-seats. 
  3. "Aradhana Misra's Biography" இம் மூலத்தில் இருந்து 4 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130504030524/http://aradhanamisra.com/biography.php. 
  4. "Team Rahul behind Congress defeat in UP, Joshi made scapegoat". 12 Mar 2012. http://post.jagran.com/Team-Rahul-behind-Congress-defeat-in-UP-Joshi-made-scapegoat-1331541986. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராதனா_மிசுரா&oldid=4378052" இலிருந்து மீள்விக்கப்பட்டது