உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரம் (மாலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தாரம்

கழுத்தில் மாட்டப்பட்டு மார்பில் தொங்கும் அணிகலனை ஆரம் (ஒலிப்பு) என்பர். முத்துமாலை போன்றவை இந்த ஆர வகையில் அடங்கும்.

ஆரம் மகளிர் மார்பக அணிகலன்களில் ஒன்று[1]. முத்தாரம் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று[2] வைரமணி மாலை அரசர்கள் அணிந்திருந்தனர்[3].

இக்காலத்தில் மலர்மாலையையும் ஆரம் என வழங்குகின்றனர்.

ஆரம் என்னும் சொல் 'ஹாரம்' என்னும் வடசொல்லிலிருந்து வந்தது எனச் சிலர் கருதுகின்றனர். இந்தக் கருத்து போலியானது.

"கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்" [4] என்னும் தொடரில் ஆர் என்பது ஆத்திமாலை அன்று: வளைவாகச் சுழற்றிக்கட்டிய தலைமாலையை உணர்த்தும் சொல் என்பது தெளிவு. "ஆரைச் சாகாடு" [5] என்றவிடத்து ஆர் என்பது 'வட்டமான வண்டிச்சக்கரம்' எனப் பொருள்படுவதும் மற்றொரு தெளிவான சான்று.

மேற்கோள்கள்[தொகு]

 1. அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல (சிறுபாணாற்றுப்படை 2)
 2. மாண் இழை மகளிர், புலந்தனர், பரிந்த (680)
  பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு, (மதுரைக்காஞ்சி)
 3. பாண்டியன் நெடுஞ்செழியன் காலையில் எழுந்ததும் வைரமாலை அணிந்துகொண்டான்
  திண் காழ் ஆரம் நீவி, கதிர் விடும் (715)
  ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் (மதுரைக்காஞ்சி)
 4. சிறுபாணாற்றுப்படை 65
 5. புறநானூறு 60
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரம்_(மாலை)&oldid=3449442" இலிருந்து மீள்விக்கப்பட்டது