உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரம்ப மின் வழங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரம்ப மின் வழங்கல்

ஆரம்ப மின் வழங்கல் ( Jump Start ) ஒரு வாகனத்தின் மின்கலம் முழுமையாக மின்சாரம் இழந்தால், அந்த வாகனத்தின் இயந்திரம் தொடங்காது. இந்நிலையில் மற்றொரு வாகனத்தின் செயலில் உள்ள மின்கலத்திலிருந்து மின்சாரம் பெறும் முறையை ஆரம்ப மின் வழங்கல் அல்லது மின் உதவி துவக்கம் என அழைக்கப்படுகிறது. இந்த முறை பொதுவாக “ஜம்ப் ஸ்டார்ட் / Jump Start” என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது[1].

உதவி துவக்கம் செய்யும் போது, ஒரு நன்கு செயல்படும் வாகனத்தின் மின்கலத்திலிருந்து மின்சாரம் இல்லாத வாகனத்திற்கு நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக இரட்டை மின்கம்பிகள் (“ஜம்பர் கம்பிகள்-Jumper Cable”) பயன்படுத்தப்படுகின்றன. இந்த கம்பிகளின் ஒரு முனை செயலில் உள்ள மின்கலத்துடன் இணைக்கப்படும்; மற்ற முனை மின்சாரம் இல்லாத வாகனத்தின் மின்கலத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் தேவையான மின்சாரம் கடந்து, இயந்திரம் துவங்கும். இயந்திரம் துவங்கிய பிறகு, வாகனத்தின் உள் மின்சார உற்பத்தி அமைப்பு (Alternator) மின்கலத்தை மீண்டும் நிரப்பும்.

இரட்டை மின்கம்பிகள் (Jumper Cables)

உதவி துவக்கம் செய்யும்போது சில பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மின்கலத்தின் குறியீடுகள் தவறாக இணைக்கப்படக் கூடாது. சிவப்பு நிற கம்பி நேர்ம்ம திசையில் (பாசிட்டிவ்) இணைக்கப்பட வேண்டும். கருப்பு நிற கம்பி எதிர்ம்ம திசையில் (நெகட்டிவ்) இணைக்கப்பட வேண்டும். மேலும், மின்கலத்தின் அருகில் தீப்பொறி அல்லது புகை உருவாகும் பொருட்கள் வைக்கக் கூடாது, ஏனெனில் மின்கலத்திலிருந்து உமிழும் வாயு வெடிக்கும் அபாயம் உண்டு.

மின் வழங்கல் முறை

இந்த முறை தற்காலிகமான தீர்வாகப் பயன்படும். மின்கலம் பழுதடைந்திருந்தால், அதை மாற்றி புதிய மின்கலத்தை பொருத்துவது நிலையான தீர்வாகும்.

மற்றொரு வாகனத்தைப் பயன்படுத்தாமல், தனிப்பட்ட மின்கலத் தூண்டி (Jump starter) அல்லது மின்னேற்றி (Battery charger) மூலமாகவும் வாகனத்தை இயக்க முடியும்.

மிகவும் குளிர்ந்த நாடுகள்

[தொகு]

மிகக் குறைந்த வெப்பநிலையில், ஊர்தியின் மின்கலத்தினுள் நிகழும் இரசாயனச் செயல்பாடுகள் (வேதியியல் மாற்றங்கள்) மெதுவாகிவிடுகின்றன. இதன் விளைவாக, மின்கலத்தின் ஆற்றல் (சக்தி) குறைகிறது. இந்தச் சூழ்நிலையில், ஊர்தியை இயக்கத் (ஸ்டார்ட் செய்யத்) தேவையான முழு மின்சாரத்தையும் அதனால் வழங்க முடிவதில்லை. குளிர்ச்சி அதிகமாகும்போது, இயந்திரத்தினுள் உள்ள எண்ணெய் (உராய்வைத் தடுக்கும் திரவம்) கெட்டியாகிவிடுகிறது. இந்த கெட்டியான எண்ணெயைத் தாண்டி, இயந்திரத்தைச் சுழற்றி, அதைச் செயல்பட வைக்க அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, குறைவான ஆற்றல் கொண்ட மின்கலம், அதிக ஆற்றல் தேவைப்படும் இயந்திரத்தை இயக்க முயற்சிக்கும்போது, அது சோர்வடைந்து (தோல்வியடைந்து) விடுகிறது. இதனால், ஊர்தியை மீண்டும் இயக்க, வேறொரு ஊர்தியின் அல்லது கருவியின் மின் உதவியை நாட வேண்டியுள்ளது.

லித்தியம் பேட்டரியைப் பயன்படுத்தும் ஆரம்ப மின் வழங்கல் (ஜம்ப் ஸ்டார்டர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆரம்ப மின் வழங்கல் - Jump Starting". Archived from the original on 2019-11-02. Retrieved 2021-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரம்ப_மின்_வழங்கல்&oldid=4566646" இலிருந்து மீள்விக்கப்பட்டது