உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரணியில் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரணியில் சாலைகள் மூலம் பேருந்து போக்குவரத்தும், ரயில்கள் மூலம் ரயில் போக்குவரத்தும் இந்த நகரை பிற இடங்களுடன் இணைக்கின்றன [[1]].

சாலை வசதிகள்

[தொகு]

பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி‌ நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன.ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆரணி நகரில் ஆற்காடு(சென்னை) சாலை

பேருந்து வசதிகள்

[தொகு]

புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம்

[தொகு]
  • தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு (தடம் எண் - 202) 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இவற்றில் (தடம் எண் - 202UD) UD(ULTRA DELUXE SERVICE) எனப்படும் சொகுசு பேருந்துகள், குளிர்ச்சாதன பேருந்துகள்(Volvo AC Bus Service), விரைவு பேருந்து சேவைகளும்(Express Service) மற்றும் இடைநில்லா பேருந்து(Fast to Fast Service) எனப்படும் அதிவிரைவு பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.

ஆரணி நகரிலிருந்து பிற பகுதிகளிலும், அதற்கு அப்பாலும் செல்வதற்க்கு பல பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவற்றில் சில:

தடம் எண் புறப்படும் இடம் சேரும் இடம் வழி
202 ஆரணி சென்னை ஆற்காடு
200 திருவண்ணாமலை சென்னை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி
204 UD போளூர் சென்னை களம்பூர், ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி
423 திருவண்ணாமலை சென்னை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
135 ஆரணி காஞ்சிபுரம் கலவை, வெம்பாக்கம்
235 திருவண்ணாமலை காஞ்சிபுரம் கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு
438 காஞ்சிபுரம் சேலம் செய்யாறு, ஆரணி, போளூர், திருவண்ணாமலை, அரூர்
502 திருவள்ளூர் ஆரணி காஞ்சிபுரம், ஆற்காடு
477 ஆரணி பெங்களூரு போளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி
444 வந்தவாசி பெங்களூரு ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி
216 வேலூர் விழுப்புரம் ஆரணி, சேத்துப்பட்டு, செஞ்சி
217 ஆரணி வேலூர் கண்ணமங்கலம், கணியம்பாடி, அடுக்கம்பாறை
434 ஆரணி கோயம்புத்தூர் போளூர், திருவண்ணாமலை, அரூர், சேலம்
435 ஆரணி திருப்பூர் போளூர், திருவண்ணாமலை, அரூர், சேலம்
432 ஆரணி ஈரோடு போளூர், திருவண்ணாமலை, அரூர், சேலம்
242 செங்கம் சென்னை போளூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
204 வேலூர் புதுச்சேரி ஆரணி, வந்தவாசி, திண்டிவனம்,
163 திருவண்ணாமலை திருத்தணி போளூர், ஆரணி, ஆற்காடு
279 ஆரணி தாம்பரம் செய்யாறு, காஞ்சிபுரம், படப்பை
234 ஆரணி தியாகராய நகர் ஆற்காடு, பூவிருந்தவல்லி, கிண்டி, சைதாப்பேட்டை
UD (SETC) வேலூர் தூத்துக்குடி ஆரணி, விழுப்புரம், திருச்சி
UD (SETC) வேலூர் தஞ்சாவூர் ஆரணி, விழுப்புரம்
665 வேலூர் புதுக்கோட்டை ஆரணி, விழுப்புரம்
வேலூர் மயிலாடுதுறை ஆரணி, விழுப்புரம்

ரயில் போக்குவரத்து வசதிகள்

[தொகு]

இதனையும் காண்க - ஆரணி ரயில் நிலையம்

ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க நகரியில் இருந்து திண்டிவனம் பாதை மத்திய அரசு மூலம் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அத்துடன், ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூருக்கு எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆரணிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஆரணி ரயில் நிலையம் ஆகும். இது 10 கி.மீ தொலைவில் ஆரணி - திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற ஆரணி நகரத்திற்கு 10 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையம் இதுவாகும். ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த இரயில் நிலையமானது ஆரணிக்குச் சுலபமாக செல்ல வழி வகுக்கும். [சான்று தேவை] திருவண்ணாமலை நகரம் மற்றும் ஆரணி சந்திப்பு இரயில் நிலையங்களுக்கு அப்பால் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் வருடம் திறக்கப்பட்டது. இங்கிருந்து வேலூர், திருப்பதி, விழுப்புரம் ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது.


வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி 56885 திருப்பதி விழுப்புரம்
விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி 22603 விழுப்புரம் திருப்பதி
விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி 56886 விழுப்புரம் காட்பாடி
காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி 56881 காட்பாடி விழுப்புரம்
விழுப்புரம்-திருப்பதி 56882 விழுப்புரம் திருப்பதி
காட்பாடி-விழுப்புரம் 56883 காட்பாடி விழுப்புரம்

விமானப் போக்குவரத்து

[தொகு]

ஆரணியில் விமான நிலையங்கள் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் மூலம் பயணம் செய்யலாம். அருகிலுள்ள விமான நிலையங்களான சென்னை பன்னாட்டு விமான நிலையம் 123 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் 234 கிமீ தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணியில்_போக்குவரத்து&oldid=3504937" இலிருந்து மீள்விக்கப்பட்டது