ஆரஞ்சு மின்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரஞ்சு மின்சிட்டு
தென்னிந்தியாவில் ஆண் ஆரஞ்சு மின்சிட்டு
இலங்கையில் பெண் ஆரஞ்சு மின்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கேம்பிபாஜிடே
பேரினம்: பெரிகுரோகாக்டசு
இனம்: பெ. பிளேமியசு
இருசொற் பெயரீடு
பெரிகுரோகாக்டசு பிளேமியசு
பார்சுடர், 1781

ஆரஞ்சு மினிசிட்டு (பெரிக்ரோகோடசு பிளேமியசு) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மேற்கு கடற்கரையிலும் மற்றும் இலங்கையிலும் காணப்படுகிறது.[2] முன்னர் இது குங்குமப் பூச்சிட்டின் துணையினமாகக் கருதப்பட்டது. இது கிழக்கு மற்றும் வட இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலான காணப்படுகிறது.[3] இவை மிதவெப்ப காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடு ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும். பூச்சிகளை உண்ணும் இந்த சிற்றினப் பறவைகள் பிற சிற்றினங்களுடன் இரை தேடும்.

வகைப்பாட்டில்[தொகு]

பேரினப் பெயரானது பண்டைய கிரேக்கச் சொல்லானது பெரியிலிருந்து வந்தது. பெரி என்பதன் பொருள் 'மிகவும்' என்பதாகும்; குரோகோடசு என்பதற்கு குங்குமப்ப நிறம் என்று பொருள். பிளமேமசு என்ற சிற்றினத்தின் பெயர் இலத்தீன் மொழியில் தன் வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது 'உமிழும்' அல்லது 'சுடர்-நிறம்' (பிளாமா - 'சுடர்') என்று பொருள். இந்த சிற்றினத்தின் ஆங்கிலப் பெயர் குங்குமப்பூ மின்சிட்டிலிருந்து ஆரஞ்சு மினிசிட்டாக மாற்றப்பட்டது. இந்த இரண்டு சிற்றினங்கள் பிளவுபட்டதைத் தொடர்ந்து பெரிக்ரோகோடசு இசுபேசியோசசுக்கு முந்தியது ஒதுக்கப்பட்டது.[4] இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த உயிரினங்களின் கூட்டமைப்பிலானது.

விளக்கம்[தொகு]

ஆரஞ்சு மின்சிட்டு சுமார் 17 முதல் 22 செ.மீ. நீளமுடையது. இதன் எடை சுமார் 19 முதல் 24.5 கிராம் ஆகும். ஆண்கள் பிரகாசமான ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்திலும், பெண் பறவைகள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் சாம்பல் நிறத்துடன் இருக்கும். ஆண் பறவைகள் பளபளப்பான கருப்பு தலை, கன்னம், தொண்டை மற்றும் மேலங்கி மற்றும் மேல் முதுகுடன் காணப்படும். கீழ் முதுகு, முதுகு மற்றும் மேல் வால்-சிறகு ஆரஞ்சு-சிவப்புடன் அடிப்பகுதிகள் பெரும்பாலும் பிரகாசமான ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் உள்ளன. இது இதனைச் சுற்றுப்புறத்திலிருந்து தனித்துக் காட்டுகிறது. பெண் பறவைகள் மஞ்சள் நிற நெற்றி மற்றும் சாம்பல்-சாம்பல், கீழ் முதுகு இருக்கும். ஆண் பறவையில் சிவப்பு நிறத்தில் காணப்படும் பகுதிகள் பெண் பறவையில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

ஆரஞ்சு மின்சிட்டு சிற்றினங்கள் கூட்டமாக வாழுகின்றன. பொதுவாகச் சிறிய குழுக்களாக (2க்கும் மேற்பட்ட பறவைகள்) காடுகளில் உள்ள மரங்களின் உச்சியில் உணவு தேடும். மினிசிட்டுகள் பெரும்பாலும் காடுகளின் விதானத்தின் மீது பறப்பதைக் காணலாம். இவை முதன்மையாகப் பூச்சிகளை உண்ணக்கூடியவை. இவை சுற்றுப்புறங்களைச் சுற்றிலும் நோட்டமிடுவதற்காக அறியப்படுகின்றன. இவை பறந்து பறந்து, தாவரப் பரப்புகளில் சுற்றித் திரிந்து பூச்சிகளைப் பிடிக்கின்றன. இந்த நடத்தை பெரும்பாலும் சாலி-கிலீனிங் என்று அழைக்கப்படுகிறது. இவை மற்ற விதான வகை பறவைகளுடன் வேட்டையாடி உணவு உண்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Pericrocotus flammeus". IUCN Red List of Threatened Species 2018: e.T22706766A130430325. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706766A130430325.en. https://www.iucnredlist.org/species/22706766/130430325. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Orange Minivet".
  3. "Scarlet Minivet - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  4. J, Praveen (13 July 2020). "Taxonomic updates to the checklists of birds of India, and the South Asian region 2020". Indian Birds 16: 12–19. http://indianbirds.in/pdfs/IB_16_1_PraveenETAL_TaxonomicUpdates2020.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சு_மின்சிட்டு&oldid=3769982" இலிருந்து மீள்விக்கப்பட்டது