ஆரஞ்சு மிட்டாய் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரஞ்சு மிட்டாய்
சுவரொட்டி
இயக்கம்பிஜூ விஸ்வநாத்
தயாரிப்புவிஜய் சேதுபதி
பி. கணேஷ்
கதைபிஜூ விஸ்வநாத்
விஜய் சேதுபதி
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புவிஜய் சேதுபதி
ரமேஷ் திலக்
அஷ்ரிதா
கருணாகரன் (நடிகர்)
ஒளிப்பதிவுபிஜூ விஸ்வநாத்
படத்தொகுப்புபிஜூ விஸ்வநாத்
கலையகம்விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ்
காமென் மேன்
விநியோகம்காஸ்மோ வில்லேஜ் கஃபா எக்ஸ்போர்ட்ஸ் (வெளிநாடு)
வெளியீடு31 சூலை 2015 (2015-07-31)
ஓட்டம்101 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆரஞ்சு மிட்டாய் என்பது 2015ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பிஜூ விஸ்வநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி தயாரிப்பில் முதன்மை வேடத்தை ஏற்று நடித்தார். இவருடன் ரமேஷ் திலக், ஆசிர்தா மற்றும் கருணாகரன் (நடிகர்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் 2014ல் தயாரிக்க தொடங்கப்பட்டது.[1]

கதை[தொகு]

சத்தியா (ரமேஷ் திலக்) அவசர ஆம்புலன்ஸ் சேவையை நடத்திவரும் ஒரு மருத்துவ உதவியாளர். அவரது தந்தையின் முதலாமண்டு நினைவு நாளில், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒரு வயதான பெரியவரை சத்யா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இருவரும் மீட்டெடுக்கிறார்கள். நோயாளி, கைலாசம் (விஜய் சேதுபதி), ஒரு இதய நோயாளியாக இருப்பதால் தனது உயிருக்கு போராடுகிறார். அந்த நிலையில் . கைலாசத்தின் எரிச்சலூட்டும் மற்றும் பிடிவாதமான செய்கையானது அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ உதவியளிப்பது சத்யாவிற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. கைலாசம் யார்? அவருக்கு என்ன வேண்டும்? அவரது பிடிவாதமான இயல்புக்கு காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்கள் கதையின் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் ஒரு மருத்துவமனையை கண்டுபிடிக்கும் தேவை இருக்கிறது,, ஆனால் அது ஒரு நீண்ட தூர பயணமாக இருக்கிறது. பிரபஞ்சம் என்ன திட்டமிட்டுள்ளது என்பதை அறிய ஒரே வழி, பயணம் செய்வதே ஆகும், சில நேரங்களில் பயணம் என்பதே இலக்காகும்.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

நடிகர் விஜய் சேதுபதி தயரித்துள்ள முதல் படம் "ஆரஞ்சு மிட்டாய்", இது 2014 பிப்ரவரியில் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்தது இப்படத்தில் ஜெயப்பிரகாசு, ரமேஷ் திலக், அனு பாலா ,அஷ்ரிதா உட்பட பலரும் நடித்திருந்தனர்.[2][3]

2014 ஜூலையில் விஜய் சேதுபதி தான் 55 வயது கொண்ட முதியவர் பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். இது முதலில் நடிகர் ஜெயப்பிரகாசு நடிப்பதாக இருந்தது.[4] அவர் எழுத்தராக அறிமுகமான முதல்படம் இதுவாகும்.[5] இப்படக்குழு தென் தமிழ்நாட்டின் அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான திருநெல்வேலி, பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) போன்ற இடங்களில் படமாக்கியது. .[6]

ஒலித்தொகுப்பு[தொகு]

இதன் ஒலித்தொகுப்பினை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொண்டார். விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு இசையமத்தவராவார். இப்படத்தின் பாடல்கள் 2015 ஜூலை 1 அன்று வெளியிடப்பட்டது.[7] நான்கு பாடல்கள் கொண்டதில் இரு பாடல்களை விஜய் சேதுபதியே இயற்றி பாடியிருந்தார்.[8]

Untitled
Soundtrack
வெளியீடு1 ஜூலை 2015
இசைப் பாணிFilm soundtrack
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன் chronology
பண்ணையாரும் பத்மினியும்
(2014)
'''''
(2015)
Kunjiramayanam
(2015)
# பாடல்பாடியோர் நீளம்
1. "ஸ்ரைட் ஆன்லைன் போயிடும்"  விஜய் சேதுபதி  
2. "தீராத ஆசைகள்"  கார்த்திக் (பாடகர்)  
3. "ஒரே ஒரு ஊருல"  விஜய் சேதுபதி  
4. "பயணங்கள் தொடருதே"  நரேஸ் ஐயர், பத்மலதா  

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]