தோடம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆரஞ்சுப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தோடம்பழம்
தோடம்பழம்
தோடம்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
பேரினம்: தோடை
இனம்: C. × sinensis
இருசொற்பெயர்
Citrus × sinensis
(L.) Osbeck[1]

தோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் x சினேசிஸ் (Citrus × sinensis) பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் தரும் தாவரம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.

பெயர் வந்த முறை[தொகு]

இந்தப் பழத்தின் நிறத்தை ஒத்துள்ள நிறத்தை ஆரஞ்சு நிறம் (Orange) என்று ஒரு வண்ணத்தைக் குறிப்பிடுகின்றனர். இதில் பெரும்பாலும் எல்லாப் பழங்களிலும் பதினொரு சுளைகள் இருக்கின்றன. ஆறும் அஞ்சும் பதினொன்று; இதனால் ஆறஞ்சு என்னும் சொல் மருவி ஆரஞ்சு என வழங்கப்படுவதை உணரமுடிகிறது. இனிப்பு கலந்த ஆரஞ்சுக்கு இந்தச் சுளை எண்ணிக்கை பொருந்துவதில்லை.

பயன்கள்[தொகு]

இப்பழங்களில்வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி, பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.

தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. புண்களை விரைவாக ஆற்றுதல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளை இப்பழங்கள் கொண்டுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகின்றன.

குறிப்புக்கள்[தொகு]

  1. "Citrus sinensis information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்த்த நாள் 2008-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடம்பழம்&oldid=1893469" இருந்து மீள்விக்கப்பட்டது